»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்ரனும் அவரது வீட்டினரும் அவரது திருமண செய்தியை மறுத்துள்ளனர்.

சிம்ரனுக்கும் திலீப் என்ற பைலட்டுக்கும் நேற்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கப்போவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இதுபோன்ற செய்திகளை சிம்ரன் கோபத்துடன் மறுத்துள்ளார். மேலும் அவர்ஹைதராபாத்தில் அவர் "சேட்டையா" என்ற தெலுங்குப் படத்தில்தான் அவர் நடித்துக்கொண்டிருந்தாரே தவிர நேற்று அவர் மும்பைக்கே செல்லவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

"யாரோ ஒரு தயாரிப்பாளர் (ராக்லைன் புரொடக்சன் தயாரிப்பாளர்) என்னுடைய திருமணத்தைப்பற்றிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என் திருமணத்தை நான் ஏன் மறைக்கணும்?நிச்சயமாக ரசிகர்களுக்குத் தெரியும்படிதான் திருமணம் செய்து கொள்வேன். எதையும் மறைக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்று எரிச்சலுடன் கூறியுள்ளார் சிம்ரன்.

பத்திரிக்கைகள் எப்படி வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும், எனக்கு அதைப் பற்றியகவலை இல்லை என்றும் தன் உதவியாளர் காமராஜிடம் கோபத்துடன் சிம்ரன் கூறியுள்ளார்.

அதைஅவர் அப்படியே நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு "கோவில்பட்டி வீரலட்சுமி" படப்பிடிப்புக்காகவிரைவில் சென்னை திரும்பவுள்ளார் சிம்ரன். அப்போது அவர் நிருபர்களைச் சந்தித்து அனைத்துகிசுகிசுக்களுக்கும் முற்றுப் புள்ளி வைப்பார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் "தீண்ட தீண்ட", "ஒரு நடிகையின் கதை" போன்ற படங்களில் நடிப்பதற்காக வாங்கியஅட்வான்ஸ் பணத்தைக் கூட சிம்ரன் திருப்பிக் கொடுத்து விட்டதாக வெளியான செய்திகளும்புரளிதான் என்றும் அவரது உதவியாளர்கள் கூறுகின்றனர்.

அதே போல சிம்ரனின் திருமண செய்தி குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது என்று அவரதுதங்கை ஜோதியும் மும்பையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil