சிம்ரன் தங்கை மோனலின் மர்ம மரணம்.. சோகத்தை சுமந்த நடிகையின் மறுபக்கம்!

சென்னை: நடிகை சிம்ரனின் தங்கை மோனலின் சோகம் நிறைந்த வாழ்க்கையின் மறுபக்கம்.

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த நடிகை சிம்ரனுக்கு மோனல், ஜோதி ஆனந்த் என்ற இரண்டு தங்கைகளும், சுமீத் நவல் என்ற ஒரு சகோதரனும் உள்ளார்.

Simrans younger sister Monals tragedy life and sad story

நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த கொண்டு இருந்த போது, அவரது தங்கை மோனல், இந்திர தனுஷ் என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

சிம்ரனின் தங்கை: நடிகை மோனல் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே, மாடலிங்கில் செய்து வந்தார். அதன் பின் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தவருக்கு சினிமா வாய்ப்பு கதவை தட்டியது. விஜய் நடித்த பத்ரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மோனல், அதன் பிறகு பார்வை ஒன்றே போதுமே படத்தில் குணாலுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அந்த படத்தின் பாடல்கள் அனைத்து மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

Simrans younger sister Monals tragedy life and sad story

கொடி கட்டி பறந்தார்: லவ்லி, சமுத்திரம், சார்லி சாப்ளின் என வரிசையாக ஹிட் படங்களில் நடித்து, 2000களில் கொடி கட்டிப் பறந்த சிம்ரனோட தங்கை மோனல் 2002 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு டான்ஸ் மாஸ்டர் பிரசன்னா சுஜித்தான் காரணம் என்று சிம்ரன் குற்றம் சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் வழக்கு ரத்துசெய்யப்பட்டது.

விபரீத முடிவு: ஆனால், தற்கொலை செய்து கொண்ட மோனல், இந்த விபரீத முடிவடை எடுப்பதற்கு முன்,வாழ்க்கையில் உண்மையான ஆம்பளையை நான் சந்திக்கவே இல்லை என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார். அந்த சமயத்துல பார்வை ஒன்றே போதுமே படத்தில் நடிச்ச குணாலுடன் காதல் என்றும் அதை அவர் ஏற்காததால் இந்த முடிவை எடுத்ததாகவும் சொல்லப்பட்டது.

மறையாத சோகம்: அக்கா சிம்ரனைப் போல டாப் நடிகையாக வரவேண்டிய மோனலின் வாழ்க்கை சோகத்தால் காற்றோடு கரைந்து போனது. தங்கையின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத சிம்ரன் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே சென்றுவிடும் அளவிற்கு மன வேதனையில் இருந்தார். மோனல் இறந்து 21 வருடங்களை கடந்த பின்பும் தனது தங்கையின் இழப்பில் சிம்ரன் மீளமுடியாமல் தவித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X