சிம்டாங்காரனுக்கு 17 மணிநேரத்தில் 5 மில்லியன் வியூஸ்: எல்லாப் புகழும் இறைவனுக்கே
Recommended Video

சென்னை: சிம்டாங்காரன் பாடல் செய்திருக்கும் சாதனையை பார்த்து எல்லாப் புகழும் இறைவனுக்கே என்கிறார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் வரும் சிம்டாங்காரன் பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. பாடல் வரிகள் சுத்தமாக புரியவில்லை என்பதே பலரின் புலம்பல்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், பாடல் ஆசிரியர் விவேக்கின் வித்தியாசமான முயற்சியை பலரும் கலாய்த்தாலும் விஜய் ரசிகர்கள் அந்த பாடலை ரிப்பீட் மோடில் போட்டு வெறித்தனமாக கேட்கிறார்கள்.
சாதனை
விஜய் ரசிகர்களின் வெறித்தனமான அன்பால் சிம்டாங்காரன் பாடல் வெளியான 17 மணிநேரத்தில் அதை யூடியூப்பில் 5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். சிம்டாங்காரனின் இந்த சாதனையை பார்த்த ரஹ்மானோ, வழக்கம் போன்று தன்னடக்கத்துடன் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ட்வீட்டியுள்ளார்.
வாழ்த்து
ரஹ்மானின் ட்வீட்டை பார்த்த ரசிகர் ஒருவர் அவரை ஜீனியஸ் என்று பாராட்டியுள்ளார்.
விஜய்
இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கும் வரை விஜய்யை யாராலும் அசைக்க முடியாது.
கலாய்
சிம்டாங்காரனை பாராட்டுவதற்கு இணையாக கலாய்க்கவும் செய்து கொண்டிருக்கிறார்கள்


Click it and Unblock the Notifications











