சிம்டாங்காரன் விஜய் இல்லையா வடிவேலுவா?: மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ் #Simtaangaran
சென்னை: விஜய்யின் சிம்டாங்காரன் பாடலை கலாய்த்து வரும் வீடியோக்கள், புகைப்படங்களை பார்த்து சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை சிம்டாங்காரன் பாடல் வெளியிடப்பட்டது.
சிம்டாங்காரன்
சென்னை பாஷையில் இருக்கும் சிம்டாங்காரன் பாடலை கேட்டதுமே மக்கள் கலாய்க்கத் துவங்கிவிட்டனர். அய்யோ, அதிலும் வடிவேலுவின் டான்ஸ் மூவ்மென்ட் சிம்டாங்காரனுக்கு அப்படி அம்சமாக பொருந்துகிறது. அந்த கலாய் வீடியோக்களை பார்த்து சிரிப்பு வராதவர்களுக்கு கூட குபீர் என்று சிரிப்பு வந்துவிடும்.
யார் கிட்ட?
விவேக் விஜய்க்காக எழுதிய சிம்டாங்காரன் வடிவேலுவுக்கு தாங்க நச்சுன்னு பொருந்துது. சிரிச்சு மாளல.
காளகேயர்கள்
சிம்டாங்காரன் பாடலை கேட்டால் காளகேயர்களின் பாஷை மாதிரி இருக்குதே!!!
சிரிப்போ சிரிப்பு
சிரிப்பு சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
ரசிகர்கள்
என்னவென்றே புரியவில்லை, தளபதிக்காக சமாளிப்போம்.
முடியல
ஹய்யோ, ஹய்யோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
அல்டிமேட்
யார் பார்த்த வேலைப்பா
இது தேவையா?
ஒரு பாட்டுக்கு இந்த பாடா?


Click it and Unblock the Notifications











