அரை மணி நேரத்தில் 2.1 மில்லியன்: சிம்டாங்காரன் பாடல் புதிய சாதனை
சென்னை: சர்க்கார் திரைப்படத்தின் சிம்டாங்காரன் பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.
சர்க்கார் திரைப்படத்தின் "சிம்டாங்காரன்" என்ற சிங்கிள் டிராக் நேற்று வெளியானது. மாலை 5 மணிக்கு சன் நெக்ஸ்ட் ஆப்பிலும், 6 மணிக்கு இணையதளங்களிலும் வெளியிடப்பட்டது.

சிம்டாங்காரன் என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என குழம்பிய ரசிகர்களுக்கு தெளிவாக விளக்கமளித்து விவேக் காப்பாற்றினார். அவை அனைத்துமே விஜய்க்கு பொருத்தமான வார்த்தையாக இருந்ததனால், மேலும் உற்சாகமடைந்தனர்.
இந்த நிலையில் பாடல் ஐந்து மணிக்கு வெளியாகும் என்பதால், பலரும் சன் நெக்ஸ்ட் ஆப்பை வெறித்தனமாக டவுன்லோடு செய்து, சிம்டாங்காரன்... சிம்டாங்காரன் என தேடியதால் சர்வர் டவுனாகி கொஞ்சநேரம் ஏமாற்றியது. சர்வர் டவுனாகும் அளவிற்கு தீயாக இறங்கியதும் ஒரு சாதனைதான்.
இருந்தாலும், இது கானாவா, வெஸ்ட்ர்னா, மெலடியா, அல்லது வெஸ்ர்டர்ன் கானாவா என எதிலுமே பிடிபடாத ஒரு பாடலாக இருந்தது. ஆனால் செம்ம ஜாலியாக கும்மாளமடிக்க கேட்கும் பாடல் என்பதால் விஜய் ரசிகர்கள் ரிப்பீட் மோடில் கேட்டு வருகின்றனர்.
பாடல் வெளியான நான்கு மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துவிட்டது. என்னது நாலு மணி நேரத்துல ஒரு மில்லியன் தானா என கோதாவில் குதித்த விஜய் ரசிகர்கள் அடுத்த அரை மணி நேரத்தில் 3.1 மில்லியனை கடக்க வைத்து சாதனை செய்துவிட்டனர்.
பாடல் வெளியாகி 16 மணி நேர நிலவரப்படி 4.1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. நேற்றிரவு 10 மணியில் இருந்து 10.30 மணிக்குள் மட்டுமே இப்பாடலை 2.1 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











