பாதி முகம் காட்டும் பாரி வெங்கட்.. சினம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
Recommended Video
சென்னை: நடிகர் அருண் விஜய்யின் 42வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அஜித் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அருண் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிறந்த நாள் பரிசாக அருண் விஜய்யின் சினம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.
தியாகு
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் மிரட்டல் வில்லன் விக்டராக நடித்திருந்த அருண் விஜய், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்கச்சிவந்த வானம் படத்தில் மாஸ் வில்லன் தியாகுவாக நடித்திருந்தார். தாதாவான அப்பா பிரகாஷ் ராஜின் அடுத்த சிம்மாசனத்தை பிடிக்க முயற்சிக்கும் போட்டியில், அந்த சோபாவில் கெத்தாக அமரும் தியாகுவாக அருண் விஜய்யின் ஆக்டிங் வேற லெவல்.
பாரி வெங்கட்
ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் குற்றம் 23 படத்திற்கு பிறகு மீண்டும் போலீஸ் யூனிஃபார்மில் பாரி வெங்கட்டாக அருண் விஜய் நடித்துள்ளார். பாரி வெங்கட்டின் பாதி முகம் தெரியும் வித்தியாசமான இந்த ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் மணிரத்னம் தற்போது வெளியிட்டுள்ளார். மணிரத்னத்துடன் நடிகர் அருண் விஜய், நடிகை பாலக் லால்வாணி, இயக்குநர் குமரவேலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆர்யான்
லைகா நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள அந்த படத்தில் ஹண்டர் ஆர்யானாக அருண் விஜய் நடித்துள்ளார் என்பதை லைகா நிறுவனம் இன்று அறிவித்தது. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளனர்.
பாக்ஸர்
அருண் விஜய் நடிப்பில் அடுத்து அரை டஜன் படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் மற்றும் அருண் விஜய் நடித்துள்ள பாக்ஸர் படமும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு அருண் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியாண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











