சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!

சென்னை : குற்றம் 23 திரைப்படத்திற்கு பிறகு அருண் விஜய் இப்பொழுது மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ள திரைப்படம் சினம்.

இதன் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் சமூகத்தில் நடக்கும் குற்றங்களை அதிரடியாக தட்டிக்கேட்கும் போலீஸ் அதிகாரியாக அருண்விஜய் நடித்து உள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த சினம் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து இப்பொழுது ரிலீசுக்கு தயாராக இருக்க சென்சார் குழு இதற்கு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

நம்பிக்கைக்குரிய நடிகராக

நம்பிக்கைக்குரிய நடிகராக

நடிகர் அருண் விஜய்யின் ஒவ்வொரு திரைப்படங்களும் சொல்லி அடித்த கில்லி போல திரையரங்குகளில் வெற்றி பெற்று வசூலை அள்ளி தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நடிகராக இவர் உயர்ந்து வர சில முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களிலும் நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார்.

அருண்விஜய் 31

அருண்விஜய் 31

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த செக்க சிவந்த வானம் படத்தில் நெகட்டிவ் கலந்த ஹீரோவாக நடித்து மிரட்டி இருந்த அருண் விஜய் இப்பொழுது குற்றம் 23 திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அறிவழகன் உடன் இணைந்துள்ள அருண்விஜய் 31 படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்த நிலையில் அதில் ரெஜினா கெஸன்ட்ரா இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மிடுக்கான நடிப்பை

மிடுக்கான நடிப்பை

தேசிய விருது பெற்ற இயக்குனர் ஜி.என். ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் சினம் திரைப்படத்தில் நடிகை பாலக் லால்வானி கதாநாயகியாக நடித்துவர. இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இதன் டீசர் வெளியிடப்பட்டு அனைவரையும் மிரட்டியது. குற்றம் 23 திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படங்களிலும் போலீஸ் அதிகாரியாக நடிக்காமல் இருந்த அருண்விஜய் இப்பொழுது மீண்டும் போலீஸ் உடையை உடுத்தி மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் சினம் திரைப்படம் இப்பொழுது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

சென்சார் வேலைகள் முடிந்து

சென்சார் வேலைகள் முடிந்து

அருண் விஜய் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கின்ற வகையில் இருக்க, அதே பாணியில் மிரட்டும் தோணியில் மிடுக்கான போலீஸ் உடையில் அருண் கலக்கியிருக்கும் சினம் திரைப்படம் இப்பொழுது சென்சார் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்க இதற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சினம் அருண் விஜய்க்கு 30வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X