சினம் பட அப்டேட்.. முரட்டு மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில் அருண்விஜய் !

சென்னை : மாஸ் கெட்டப்பில் மாஸ் அப்டேட்டுடன் தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அருண் விஜய்.

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் அருண் விஜய் நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் குமரவேலன் இயக்கத்தில் சீனம் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

லாக்டவுன் காரணத்தால் பல கட்ட வேலைகள் தள்ளிப்போக தற்பொழுது இதன் டப்பிங் வேலைகள் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் அருண்விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 வசூலில் முன்னிலை

வசூலில் முன்னிலை

அருண்விஜய் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான தடம் திரைப்படம் தமிழ் திரைப்படத் துறையில் ஒரு புதிய தடத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய வெற்றி பெற்று சென்ற ஆண்டு மிகப்பெரிய வசூலை ஈட்டிய திரைப்படங்களில் முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்பொழுது தெலுங்கு மற்றும் இந்தியிலும் இந்தத் திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இரண்டு வேடங்களில்

இரண்டு வேடங்களில்

அருண் விஜய்யின் 25வது படமாக வெளியான தடம் திரைப்படத்தில் அருண் விஜய் முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருந்த நிலையில், இந்த திரைப்படம் தெலுங்கில் "ரெட்" என்ற பெயரில் ராம் பொத்தினேனி நடிப்பிலும், ஹிந்தியில் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பிலும் தயாராகிக்கொண்டிருக்கிறது.

கையில் அரை டஜன் படங்கள்

கையில் அரை டஜன் படங்கள்

அருண்விஜய் நடித்த திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி ரசிகர்களையும் கவர்ந்து அந்த திரைப்படங்கள் பல்வேறு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது கையில் அரை டஜன் படங்களுடன் ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

மாஸான கெட்டப்பில்

மாஸான கெட்டப்பில்

அக்னிசிறகுகள், வா டீல், மற்றும் பாக்சர் உள்ளிட்ட திரைப்படங்களின் அப்டேட் அவ்வப்போது வெளிவந்த நிலையில் தற்பொழுது "சினம்" படத்தைப் பற்றிய மாஸான அப்டேட் ஒன்றை, மாஸான கெட்டப்பில் அருண் விஜய் வெளியிட்டுள்ள செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சினம் டப்பிங் வேலைகள்

சினம் டப்பிங் வேலைகள்

நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வரும் இயக்குனர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சினம் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில் அதன் இதர வேலைகள் கொரானா லாக்டவுன் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது இதன் டப்பிங் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

டப்பிங் முடித்த கையோடு

டப்பிங் முடித்த கையோடு

நடிகர் அருண் விஜய் இப்பொழுது சினம் திரைப்படத்தின் டப்பிங்கில் தந்தையும் நடிகருமான விஜயகுமார் உடன் இணைந்து கலந்துகொண்டு தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் செய்து முடித்த கையோடு, மாஸான கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

முரட்டு மீசை

முரட்டு மீசை

வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் முரட்டு மீசை வைத்துக்கொண்டு பார்க்க கம்பீரமாக லுக்கில் காட்சியளிக்கும் இந்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அருண் விஜய் ட்விட்டர் பக்கத்தில் "கடவுளின் அருளால் சினம் திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் முடிவடைந்து விட்டது" என்ற மாஸான அப்டேட்டை, முரட்டு மீசை வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் உள்ள மாஸான லுக்கில் டப்பிங் ஸ்டுடியோவில் டப்பிங் செய்தவாறு வெளியிட்டுள்ளார். இந்த மாஸான புகைப்படங்கள் சினம் திரைப்படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த கெட்டப்பைபில் பார்த்த அவரது ரசிகர்கள் அருண் விஜய்யை சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் பார்க்க வேண்டுமென தங்களது நீண்ட நாள் ஆசையை கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X