நடுத்தெருவில் காதலனால் அடிவாங்கிய பிக்பாஸ் பிரபலம்.. முடிவுக்கு வந்த 5 ஆண்டு காதல்..யார் அந்த நடிகை!

சென்னை: காதல் மனதிற்குள் வந்துவிட்டால், நாம் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று கூட தெரியாது. மனசு என்னென்ன சொல்கிறதோ, அது இஷ்டத்திற்கு அனைத்தையும் செய்து கடைசியில் பிரச்சனை ஆன போதுதான். கொஞ்சம் யோசித்து இருக்கலாம் என்ற புத்தியே வரும். அப்படித்தான், நடிகர் ஒருவரை ஐந்து வருடமாக விழுந்து விழுந்து காதலித்த நடிகை ஒருவர் கடைசியில் அவரால் பொது இடத்தில் அடிவாங்கி அவமானப்பட்டுள்ளார்.

Bigg Boss Sindhu Bairavi Tina Dutta

கொல்கத்தாவில் பிறந்த அந்த நடிகை டினா தத்தா குழந்தை நட்சத்திரமாக பிடா மாதா சாந்தன், தாரக் என்கிற பெங்காலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பின் இவர் 2005ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் நடித்த Chokher Bali என்ற பெங்காலி படத்தில் ஒரு நல்ல ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு ஒரு சில படத்தில் நடித்த இவருக்கு பட வாய்ப்பு சரியாக அமையாததால் சீரியல் பக்கம் வந்தார்.

Bigg Boss Sindhu Bairavi Tina Dutta

சிந்து பைரவி நடிகை: நடிகை டினா தத்தா நடித்த அனைத்து சீரியல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்து தொடர்களில் நடித்தார். இந்தியில் இவர் நடித்த உத்தரன் என்ற சீரியல் மிக்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த தொடர் ராஜ் டிவி, கலர்ஸ் தொலைக்காட்சியில் சிந்து பைரவி என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. இந்த சீரியல் டப்பிங்காக இருந்தாலும், இதில் டினா தத்தாவின் நடிப்பை பார்த்து அதற்கு என்றே தனி ரசிகர்கள் இருந்தார்கள். அந்த அளவிற்கு பிரபலமாக இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தான் சந்தித்த பிரச்சனை குறித்து கூறியிருந்தார்.

Bigg Boss Sindhu Bairavi Tina Dutta

நடுத்தெருவில் நடித்த காதலன்: அதில், என் தோழி மூலமாக ஒருவர் எனக்கு பழக்கம் ஆனார். முதலில் நாங்கள் இருவரும் நட்பாக பழகினோம் நாளடைவில் அது காதலாக மாறியது. ஆரம்பத்தில் என் மீது அன்பாக இருந்த அவர், பின் நீ நடிப்பது பிடிக்கவில்லை, நண்பர்களுடன் பேசுவது பிடிக்கவில்லை என பலவிதத்தில் டார்ச்சர் கொடுத்தார். அவர் மீது இருந்த காதலால் நான் பலவற்றை பொருத்துக்கொண்டேன். ஒரு நாள் அவர் பொது இடத்தில், நண்பர்கள் முன்னிலையில், தெருவில் என்னை அடித்து அவமானப்படுத்திவிட்டார். இதற்கு பிறகு, இந்த காதல் வேண்டுமா என, நான் பல நாட்கள் யோசித்து அந்த காதலை முறித்துக்கொண்டேன். மீண்டும் சினிமா மீது கவனம் செலுத்தி நடித்து வருகிறேன் என்றார்.

Bigg Boss Sindhu Bairavi Tina Dutta

பல கோடி சொத்து: தற்போது நடிகை டினா தத்தா சின்னத்திரையில் மிகவும் முக்கியமான நடிகையாக இருக்கிறார். இவர் இந்தி பிக் பாஸ் 3,4,5,6 என பலவற்றில் கலந்து கொண்டார். கடைசியாக இவர் பிக் பாஸ் சீசன் 16ல் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஒரு வாரத்துக்கு 8 முதல் 9 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. அந்த சீசனில் அதிகம் சம்பளம் வாங்கிய போட்டியாளராக நடிகை டினா தத்தா இருந்துள்ளார். இவர், மும்பையில் மொத்தமாக ஒரு அப்பார்ட் மெண்ட் வைத்து இருக்கிறார். இரண்டு சொகுசு கார்களை வைத்து இருக்கும் இவரின் சொத்து மதிப்பு ரூ.65 கோடி இருக்கும் என கூறப்படுகிறது

Bigg Boss Sindhu Bairavi Tina Dutta

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X