காணாமல் போன தனுஷ் பட நடிகை.. சிம்பு படத்தில் அப்படி நடிச்சிருக்கவே கூடாது.. என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: தனுஷ் படத்தில் ஒரு ஹீரோயின் அறிமுகமானால், உடனடியாக சிம்பு படத்தில் அவரை ஹீரோயின் ஆக ஆக்குவதும், சிம்பு படத்தில் ஒரு ஹீரோயின் அறிமுகமானால் தனுஷ் பட வாய்ப்பு கிடைப்பதும் அப்போதெல்லாம் சகஜமாக நடந்து கொண்டிருந்தது.

இப்போ சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருவது போல தான்.

அப்படி தனுஷின் படத்தில் அறிமுகமான அந்த இளம் நடிகை அடுத்ததாக சிம்பு படத்தில் நடித்தார். ஆனால், அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போய் விட்டார் என்பது தான் ஷாக்கிங் ஆன விஷயமே என்கின்றனர்.

Sindhu Tolani: Dhanush and Simbu heroine who disappeared from Kollywood due to her wrong choice

தனுஷுக்கு ஜோடி: இயக்குநர் ரமணா இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான தனுஷின் சுள்ளான் படத்தில் காவ்யா எனும் கதாபாத்திரத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சிந்து துலானி. சூடானேன் சுளுக்கு எடுத்துடுவேன் என தனுஷ் ஒரு பக்கம் பஞ்ச் பேசி பறந்து பறந்து அடிக்க, மறுபக்கம் நடு ரோட்டிலேயே டிரெஸ்ஸை கழட்டி ஹோம்லி லுக்கில் இருந்து மாடர்ன் லுக்கிற்கு வந்து ரசிகர்களை கவர்ச்சியில் கிறங்க வைத்தவர் சிந்து துலானி.

Sindhu Tolani: Dhanush and Simbu heroine who disappeared from Kollywood due to her wrong choice

மன்மதன் படத்தில் மோசமான ரோல்: தனுஷை தொடர்ந்து சிம்புவின் பட வாய்ப்பு கிடைத்ததும் கொஞ்சமும் யோசிக்காமல் சென்ற சிந்து துலானிக்கு அந்த படத்தில் காதலனை ஏமாற்றி விட்டு கள்ளக் காதலன் உடன் க்ரூப் ஸ்டடி என்கிற பெயரில் பலான வேலையை செய்ய அதனை பார்த்து விடும் சிம்பு இருவரையும் போட்டுத் தள்ளும் காட்சிகள் அந்த படத்தில் ரசிகர்களை ஷாக் ஆக்கியிருக்கும்.

Sindhu Tolani: Dhanush and Simbu heroine who disappeared from Kollywood due to her wrong choice

கோலிவுட்டில் கரியர் காலி: அதன் பிறகு சிந்து துலானி தமிழ் சினிமா பக்கமே தலையை வைத்து படுக்க முடியாத அளவுக்கு டோலிவுட் பக்கம் சென்று விட்டார். ஹீரோயினாக அவருக்கு படங்கள் கோலிவுட்டில் அமையவே இல்லை. சியான் விக்ரமின் மஜா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார். 2012ல் சுந்தர் சி நடித்த முரட்டுக்காளை படத்திலும் நடித்துள்ளார் சிந்து துலானி.

Sindhu Tolani: Dhanush and Simbu heroine who disappeared from Kollywood due to her wrong choice

6 வருஷமா ஆளையே காணோம்: 2017ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சித்ராங்கடா எனும் பேய் படத்தில் அஞ்சலி ஹீரோயினாக நடித்திருந்தார். கடைசியாக அந்த படத்தில் நடித்த சிந்து துலானி அதன் பிறகு சினிமா பக்கமே தலை வைத்துப் படுக்காமல் குடும்பத்துடன் செட்டில் ஆகி விட்டார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக விஜய், சியான் விக்ரம் உடன் ஜோடி போட்டு நடித்து வந்த அமலா பால் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்ததற்கு பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகளை இழந்து சாமியாராக சுற்றி வருவது போல பல நடிகைகளின் தவறான சாய்ஸ் அவர்களின் சினிமா கரியரையே காலி செய்து விடுவதாக சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிந்து துலானிக்கும் அதுதான் நடந்தது என்றும் மன்மதன் படத்தில் அவர் ஒத்துக் கொண்ட ரோல் தான் அவருக்கு கோலிவுட்டில் பெரிய ஹீரோயினாக வலம் வர முடியாமல் செய்து விட்டது என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X