»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக டி.வி. நடிகை சிந்து மீண்டும் போலீஸிடம் சிக்கியுள்ளார்.

விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள டிவி மற்றும் சினிமா நடிகைகளை போலீஸார் தற்போது பொறிவைத்துப் பிடித்து வருகிறார்கள். இதனால், பல டி.வி. நடிகைகள், சினிமா நடிகைகள் தங்களதுஆட்டத்தை குறைத்துக் கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஒருமுறை பிடிபட்ட பின்னரும், விபச்சாரத்தை விடாமல் மேற்கொண்டு வந்த டி.வி.நடிகை சிந்து மறுபடியும் போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.

சென்னை அசோக் நகர் 12வது அவென்யூவில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் விபச்சாரம்நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் படை அங்கு விரைந்தது.

ஆனால் அங்கு பாலாஜி டிரேடிங் கம்பெனி என்ற போர்டு இருந்தது. இதனால் போலீஸார்குழம்பினர். இருப்பினும் பல பெண்களும், ஆண்களும் அங்கு சென்று வந்ததைப் பார்த்த போலீஸார்உள்ளே நுழைந்தனர்.

அங்கு சென்று பார்த்தபோதுதான் விபச்சாரம் நடந்து கொண்டிருப்பது தெரிய வந்தது.பெங்களூரைச் சேர்ந்த கீதா என்றபெண்மணி அந்த பிளாட்டை வாடகைக்கு எடுத்து அதில்பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்துள்ளார்.

பல அறைகள் அந்த வீட்டில் இருந்தன. அதில் ஒரு ஏ.சி. அறையில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தஒரு பெண்ணைப் பார்த்ததும் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், 2 மாதங்களுக்கு முன்புசாலிகிராமத்தில் தொழிலதிபருடன் விபச்சாரம் செய்ததாக பிடிபட்ட நடிகை சிந்துதான் அந்தப் பெண்.

2 மாதத்திலேயே மீண்டும் விபச்சாரத்திற்கு வந்து விட்டார் சிந்து. அவருடன் ஜாலியாக இருந்தசிவக்குமார் என்று தொழில் அதிபரையும் போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் பல்வேறு அறைகளில் விபச்சாரம் செய்து கொண்டிருந்த நீலிமா, சுதா ஆகியபெண்களையும்போலீஸார் கைது செய்தனர்.

மேலும் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதற்காக வந்திருந்த மதுரையைச் சேர்ந்த கோபி, பாலு, சென்னையைச் சேர்ந்தஅனந்த நாயுடு, சுப்ரமணியம்,மகேந்திரன், சண்முகசுந்தரம், தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துச்சாமி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிரபுஆகியோரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil