twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காட்சிகளை சுட்டு சுட்டு படம் எடுக்கும் இயக்குனருக்கு சரியான நோஸ்கட் கொடுத்த பலூன் டைரக்டர்

    By Siva
    |

    சென்னை: பிற படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு மட்டுமே படம் எடுக்கும் இளம் இயக்குனரை பலூன் பட இயக்குனர் கலாய்த்துள்ளார்.

    சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பலூன். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் சினிஷ், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அப்போது சினிஷ் கூறியதாவது,

    பலூன்

    பலூன்

    ஒரு தயாரிப்பாளர் என்னிடம் கோரிக்கை விடுத்ததால் நான் 20 நாட்களில் எழுதிய ஸ்க்ரிப்ட் தான் பலூன். இந்த ஸ்க்ரிப்ட்டை எழுதுவதற்கு முன்பு சில ஆங்கிலப் படங்களை பார்த்தேன். அந்த படங்களில் இருந்து சில காட்சிகளை எடுத்துள்ளேன்.

    காட்சிகள்

    காட்சிகள்

    அந்த காட்சிகளை எடுத்ததை ஏன் சொல்கிறேன் என்றால் தற்போது ரசிகர்கள் ரொம்ப புத்திசாலிகளாக உள்ளனர். எங்கிருந்தாவது காட்சிகளை சுட்டால் கரெக்டாக கண்டுபிடித்து விடுகிறார்கள். மௌனராகம் படம் போன்றே ஒரு படத்தை இயக்கிவிட்டு நான் மௌனராகமே பார்க்கவில்லை என்று சொல்லி தப்பிக்க முடியாது.

    நன்றி

    நன்றி

    நான் எந்தெந்த படங்களில் இருந்து காட்சிகளை காப்பியடித்தேனோ அந்த படங்களுக்கு நன்றி தெரிவித்து டைட்டில் போடுவேன். பலூன் படத்தின் ஹீரோ ஜெய் கிடையாது என்றார் சினிஷ்.

    காப்பி

    காப்பி

    காட்சிகளை என்ன படத்தையே சுட்டு இயக்குவதற்கு பெயர் போன அந்த இளம் இயக்குனரை தான் சினிஷ் கலாய்த்துள்ளதாக கோலிவுட்டில் பேசி சிரிக்கிறார்கள். கண்டமேனிக்கு காப்பியடித்து படம் இயக்குவதையே வழக்கமாக வைத்துள்ள அந்த இயக்குனர் யார் என்று உங்களுக்கு தெரியம் அல்லவா?

    Read more about: anjali அஞ்சலி
    English summary
    Balloon director Sineesh said that he has copied some scenes for his moive from Hollywood films. He took a dig at a young director who is known for copying scenes from various movies as per his wish.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X