சிலிக்கான்வேலியில் சிங்கம் 2 நூறாவது ஷோ: ரசிகர்களுடன் வீடியோவில் பேசிய சூர்யா

By Shankar

மில்பிடஸ்(யு.எஸ்): கலிஃபோர்னியாவின் சிலிக்கான்வேலியில், நூறு காட்சிகளை கடந்து சிங்கம் 2 வெற்றி நடைபோட்டுள்ளது.

நூறாவது காட்சியில் சூர்யா, ரசிகர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நேரடியாக உரையாடினார்.

மூன்று தியேட்டர்கள்

மூன்று தியேட்டர்கள்

அமெரிக்காவின் சுதந்திர தின விடுமுறை நாளான ஜூலை 4ம் தேதி, (வியாழக்கிழமை) 4 சிறப்பு காட்சிகளுடன் சிங்கம் 2 சான் ஃப்ரான்ஸிஸ்கோ - சான் ஓசே பகுதியில் வெளியானது.

அதாவது, தமிழகத்தில் வெளியாவதற்கு முன்னதாகவே சிலிக்கான்வேலியில் சிங்கம் கர்ஜிக்க ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து ஃப்ரிமாண்ட் மற்றும் மில்பிடஸ் திரையரங்குளில் வாரம் முழுவதும் 2 காட்சிகளும், வார இறுதியில் 3- 4 காட்சிகளும் தொடர்ந்து திரையிடப்பட்டது. மூன்றாவது வாரம் கூடுதலாக சான் ஓசே தியேட்டரிலும் சிங்கம் 2 வெளியானது.

சூர்யா பிறந்த நாள் கொண்டாட்டம்

சூர்யா பிறந்த நாள் கொண்டாட்டம்

ஜூலை 21 ம் தேதி நடைபெற்ற 75வது காட்சியுடன் சூர்யாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. 100 வது காட்சியில் சூர்யாவுடன் ரசிகர்களுக்கு நேரடியாக பேச வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்று வடக்கு கலிஃபோர்னியா சிங்கம் 2 வினியோகிஸ்தரும் சூர்யாரசிகன் இணையதள ஒருங்கிணைப்பாளருமான வெங்கடேஷ் பாபு பெருமுயற்சி எடுத்து, வெற்றியும் கண்டார்

2 மணி நேரம் பேசிய சூர்யா

2 மணி நேரம் பேசிய சூர்யா

இந்திய நேரம் காலை 8 மணி அளவில், தனது வீட்டிலிருந்த சூர்யா வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலிஃபோர்னியா, மில்பிடஸில் உள்ள செர்ரா(Serra) தியேட்டரில் உள்ள ரசிகர்களுடன் கலந்துரையாடினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு மிகவும் சுவராஸ்யான பதில்கள் அளித்தார்.

12 வயது ரசிகர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று ‘ சிங்கத்தை காட்டுலே பார்த்திருப்பே, கூண்டுக்குள்ளே பார்த்திருப்பே, வெறித்தனமா வேட்டையாடி பார்த்திருக்கியா ஓங்கி அடிச்சா ஒன்டரை டன்னுடா' என்ற டயலாக்கை அதே வேகத்துடன், பேசி அசத்தினார்.

இளைஞர்களுக்கு வாழ்த்து

இளைஞர்களுக்கு வாழ்த்து

இளைஞர்களுடன் பேசும் போது அதிகப்படியான முயற்சிகள் எடுத்து பெரும் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்தினார். பெரியவர்களுடன் சரளமாக பேசி குடும்பத்தில் ஒருவர் போல பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டார். சிங்கம் 2 தொடர்பான பல சுவாராஸ்யமான தகவல்களையும் பரிமாறிக் கொண்டார்.

துரை சிங்கத்தை அசத்திய ரசிகர் சிங்கம்

துரை சிங்கத்தை அசத்திய ரசிகர் சிங்கம்

துரை சிங்கம் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த சூர்யாவின் மீசை (சந்தானத்தின் வார்த்தைகளில் இறால் மீசை) மிகவும் பிரபலம். அதற்காக மிகவும் மெனக்கெட்டு மீசை வளர்த்து பராமரித்து வந்தார் சூர்யா. பே ஏரியாவில் ஜம்பு என்ற தீவிர சூர்யா, சிங்கம் 2 படத்தை வரவேற்று, மூன்று மாதத்திற்கும் மேலாக அதே இறால் மீசையுடன் வலம் வந்து கொண்டிருந்தார். அவரை பார்த்த சூர்யா ஒரு நிமிடம் வாயடைத்து, ஆச்சரியப்பட்டுப் போனார். தான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்பதையும் நினைவு கூர்ந்தார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த வீடியோ கான்ஃபரன்ஸ் தொடர்ந்தது.

பெரிய திரையில்...

பெரிய திரையில்...

திரைப்பட அளவுக்கு அதே பெரிய திரையிலும், திரைப்பட காட்சியை போலவே இந்த கான்ஃபரன்ஸ் நடைபெற்றது. அமெரிக்கத் தமிழ் ரசிகர்களுடன் இப்படி நேரடி கலந்துரையாடல் செய்த முதல் நட்சத்திரம் சூர்யா என்பது குறிப்பிடத் தக்கது. நூறாவது காட்சியைத் தாண்டி, வடக்கு கலிஃபோர்னியா -சான் ஃப்ரான்சிஸ்கோ பகுதிகளில் சிங்கம் 2 வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X