»   »  மாஸ் படத்தில் சிங்கம் டச்

மாஸ் படத்தில் சிங்கம் டச்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாஸ் படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரனீதா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் மாஸ். தலைப்புக்கேற்றது போன்று படத்தின் போஸ்டரும் மாஸாக இருந்தது.

வெங்கட் பிரபு படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்.

80 சதவீதம்

80 சதவீதம்

மாஸ் படத்தின் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இந்த படத்தின் மூலம் சூர்யா, நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி

சில காட்சிகளை படமாக்க படக்குழு தூத்துக்குடி செல்கிறது. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களின் படப்பிடிப்பும் தூத்துக்குடியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

2 பாடல்கள்

2 பாடல்கள்

படத்தில் வரும் 2 பாடல்களை மட்டுமே படமாக்கியுள்ளனர். மீதமுள்ள பாடல்களை இனி தான் படமாக்க வேண்டுமாம். படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஏப்ரல்

ஏப்ரல்

பிப்ரவரி மாத இறுதியில் படப்பிடிப்பை முடித்து ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் வெங்கட் பிரபு.

நயன்தாரா

நயன்தாரா

ஏப்ரல் மாதம் 2ம் தேதி நயன்தாரா உதயநிதி நடித்துள்ள நண்பேன்டா படம் ரிலீஸாக உள்ளது. அதே மாதம் மாஸ் படமும் ரிலீஸாகிறது. ஆக ஏப்ரல் மாதம் நயன் நடிப்பில் 2 படங்கள் ரிலீஸாக உள்ளது.

English summary
Suriya's Masss movie shooting will be held in Tuticorin where his Singam and Singam 2 movies were shot.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil