ஏங்க இதையெல்லாமா பார்ப்பாரு?.. கமல் பற்றி ஆச்சரியத்தில் சிங்கம்புலி.. என்ன பார்த்தாரு தெரியுமா?

சென்னை: கமல்ஹாசன் இந்திய திரையுலகில் பெருமிகு அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். சிறுவயதிலிருந்தே நடித்து வரும் அவர் இந்த வயதிலும் படு பிஸியாக இருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் உருவான தக் லைஃப் மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்து இயக்குநரும், நடிகருமான சிங்கம்புலி பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

கேமரா முன்பு சிறு வயது முதலே தோன்றி நடித்துவருபவர் கமல்ஹாசன். நடிப்பு மட்டுமின்றி நடனம் உள்ளிட்ட துறைகளிலும் அனுபவம் வாய்ந்தவர். சினிமாவில் அவருக்கு தெரியாத ஏரியாக்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு எதுவாக இருந்தாலும் இறங்கி வேலை செய்யக்கூடிய நபர் அவர். அதன் காரணமாகத்தான் உலக நாயகன் என்றும் விண்வெளி நாயகன் என்றும் திரைத்துறையினராலும் ரசிகர்களாலும் நீண்ட காலமாக கொண்டாடப்படுகிறார்.

Singampuli on Kamal Haasan He Watches My YouTube Videos
Photo Credit:

கமலின் ஸ்பெஷல் என்ன?: கமலை பொறுத்தவரை தன்னுடைய படத்தில் ஏதாவது ஒரு பரிசோதனை முயற்சியை செய்து பார்ப்பதில் ஆர்வம் மிகவும் உடையவர். அவரது விருமாண்டி திரைக்கதையில் புதிய பாணியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. அதேபோல் ஏராளமான படங்களில் புதுப்புது தொழில்நுட்பங்களையும் அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே அவரை பலரும் கொண்டாடுவதற்கு இன்னொரு தனிப்பட்ட காரணமாகவும் அமைந்திருக்கிறது.

இந்த வயதிலும் பிஸி: கமல்ஹாசன் இப்போதும் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் மோசமான தோல்வியையும் விமர்சனத்தையும் கேலியையும் சம்பாதித்தது. அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் மிக விரைவில் தொடங்கவிருக்கிறது. சினிமா மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்திவருகிறார். ஆனால் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கமலும், அவரது கட்சியும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
காதலியை பாதுகாக்க.. அவர் ஒரு ஜென்டில்மேன்.. திரிஷா மேடம் சொல்வதை கேளுங்க
காதலியை பாதுகாக்க.. அவர் ஒரு ஜென்டில்மேன்.. திரிஷா மேடம் சொல்வதை கேளுங்க

சிங்கம்புலி கமலின் ரசிகர்: இதற்கிடையே கமலுக்கு சாமானியர்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்களே ரசிகர்களாக இருக்கிறார்கள். கௌதம் மேனன், ரோபோ சங்கர், மணிகண்டன், லோகேஷ் கனகராஜ், அமீர் என அந்தப் பட்டியல் நீளும். அதேபோல் சிங்கம்புலியும் இப்போது அந்த லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார். தாய் கிழவி திரைப்படத்தில் தீவிரமான கமல் ரசிகராக இருந்தது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் அந்தப் படத்துக்கு பிறகு கமல்ஹாசனை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் அவர்.

சிங்கம்புலி பேட்டி: தனியார் யூடியூப் சேனலான டூரிங் டாக்கீஸுக்கு அவர் கொடுத்த பேட்டியில், "கமல்ஹாசனை நேரில் சந்தித்ததே இல்லை என தாய் கிழவி சமயத்தில் சொன்னேன். அதை அவர் பார்த்திருப்பார் போல; உடனே என்னை அழைத்தார்கள். நானும் போனேன். அப்போது அவர் என்னிடம், உங்கள் பேச்சை எல்லாம் நான் யூடியூபில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் என சொன்னார். உடனே எனக்கோ, 'இதெல்லாமா அவர் பார்ப்பார்' என ஆச்சரியமாக இருந்தது. அவர் அத்தனையையும் பார்க்கிறார். அவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் கிளம்புங்கள் எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று ஒருமுறைகூட அவர் சொல்லவில்லை"என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X