மகாராஜா பார்த்துட்டு மனைவி ரியாக்ஷன் எப்படி இருக்குமோ.. இப்பவே புலம்ப ஆரம்பித்த சிங்கம்புலி!
சென்னை: அஜித்தின் ரெட் மற்றும் சூர்யாவை வைத்து மாயாவி படங்களை இயக்கியதே சிங்கம்புலி தான் என்றால் பலரும் ஷாக் ஆகத்தான் செய்வார்கள். காமெடி நடிகராக பாயாசம் இன்னும் வரல என வசனம் பேசிய சிங்கம்புலியை தான் பலருக்கும் தெரியும். பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி, சில படங்களை இயக்கிய சிங்கம்புலி மகாராஜா படத்தில் நடிகராக மிரட்டியுள்ளார்.
கண்ணன் வருவான், பேரழகன், ரேணிகுண்டா, விருந்தாளி உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். உனக்காக எல்லாம் உனக்காக, ராஜா மற்றும் ஆஞ்சநேயா உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

அஜித்தின் பல படங்களில் பணியாற்றியுள்ள சிங்கம்புலி ஜானகி ராமன், சந்திரமுகி, நான் கடவுள், மாயாண்டி குடும்பத்தார், ஈசா, கோரிப்பாளையம், மிளகா, தூங்கா நகரம், முத்துக்கு முத்தாக, அரவான், மனம் கொத்தி பறவை, கடல், தேசிங்கு ராஜா, நய்யாண்டி, காவியத்தலைவன், சிகரம் தொடு, டிமான்டி காலனி, ஆண்டவன் கட்டளை, கருப்பன், மன்னர் வகையறா, கலகலப்பு 2, சைக்கோ, டான், அரண்மனை 4 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சிங்கம்புலி மகாராஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சேலையை பார்த்தால் கூட: மகாராஜா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நட்டி நடராஜ் மனைவியாக ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா நடித்திருப்பார். அவரும் அவரது மகள் செல்லும் போது கூட தான் மோசமாக பார்க்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். ஆனால், படத்தில் அதை கட் செய்து விட்டார் இயக்குநர் என சமீபத்திய பேட்டியில் தனது கதாபாத்திரம் குறித்து ரிவீல் செய்துள்ளார். செம ட்விஸ்ட்டான அவருடைய கதாபாத்திரத்தை இப்படி ஓபன் செய்து விட்டாரே என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
மனைவி பார்த்தால் என்ன நினைப்பாரோ: பல ஆண்டுகளாக சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் உள்ள சிங்கம்புலி இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்த நிலையில், அதை தனது மனைவி பார்த்தால் என்ன நினைப்பாரோ தெரியவில்லை எப்படி ஏற்றுக் கொள்வார் என்றும் தெரியவில்லை என பேட்டியில் புலம்பி உள்ளார். தனது மகன்கள் படத்தை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லவில்லை என்றும் கல்லூரி படிக்கும் குழந்தைகளுக்கு நம்முடைய கதாபாத்திரம் எல்லாம் புரியாது என பேசியுள்ளார். வேறு மாதிரி நினைத்துக் கொண்டு ரசிகர்கள் படத்தை பார்த்துக் கொண்டிருக்க என்னுடைய கதாபாத்திரம் திடீரென மாறியதும் அனைவரும் ஷாக் ஆகிவிடுவார்கள் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











