பங்காளி, நீ தனியா வந்து நடிய்யா பார்க்கலாம்.. வடிவேலுக்கு சிங்கமுத்து "டேரிங்" சவால்!

By Sudha

சென்னை: வடிவலு தனியாக காமெடியில் சாதிக்கவில்லை. நாங்க பத்து பேரா சேர்ந்து நடிச்சோம். தைரியம் இருந்தால் வடிவேலு தனியா வந்து நடிக்கட்டும். ஒரு பய பார்க்க மாட்டான் என்று தான் பாட்டுக்கு ஓரமாக போய்க் கொண்டிருக்கும் வடிவேலுவைக் கூப்பிட்டு வம்பிழுத்துள்ளார் சிங்கமுத்து.

சிங்கமுத்து ரொம்ப காலமாக சினிமாவில் இருப்பவர். துண்டு துக்கடா வேடங்களில் நடித்து வந்தவர்.

ஆனால் வடிவேலுவுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்த பிறகுதான் யார் இவர் என்று அனைவராலும் கேட்கப்பட்டு பார்க்கப்பட்டவர். இருவரும் இணைந்து நடித்த காமெடிக் காட்சிகள் சூப்பர் ஹிட். இப்போது நினைத்தாலும் சிரிக்க வைப்பவை.

ஈகோ மோதல்

ஈகோ மோதல்

ஆனால் இருவருக்குமே கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக ஏற்பட்ட திடீர் மோதல், ஈகோ மோதல், நிலப் பிரச்சினை தொடர்பான மோதல் இருவரையும் பிரித்து விட்டது.

மாறி மாறி புகார், வழக்கு

மாறி மாறி புகார், வழக்கு

இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுக்க, சிங்கமுத்து கைதாக, பெரும் பரபரப்பாகிக் காணப்பட்டது அந்த சமயத்தில்.

அதிமுகவுக்குப் போன சிங்கமுத்து.. திமுகவுக்கு வந்த வடிவேலு

அதிமுகவுக்குப் போன சிங்கமுத்து.. திமுகவுக்கு வந்த வடிவேலு

சட்டசபைத் தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதித்தார் வடிவேலு. அவர் விஜயகாந்த்தை மட்டும் குறி வைத்துக் குதறி எடுத்தார் பிரசாரத்தில். மறுபக்கம் சிங்கமுத்து அதிமுக மேடைப் பேச்சாளராக மாறினார்.

தனித் தனி காமெடி

தனித் தனி காமெடி

இப்போது இருவரும் தனித் தனியாக சினிமாவில் காமெடி செய்து வருகின்றனர். சிங்கமுத்து சந்தானம் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். வடிவேலு வழக்கம் போல காமெடி செய்கிறார். கூடவே ஹீரோவாகவும் மீண்டும் அதகளப்படுத்தி வருகிறார்.

நான் பிசி....

நான் பிசி....

இந்த நிலையில் வடிவே்லுவை மீண்டும் வம்பிக்கிழுத்துள்ளார் சிங்கமுத்து. இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பங்காளிக்கு (வடிவேலு) கையில படமே இல்லை. நான் நடிச்ச 11 படங்கள் ரிலீசுக்கு ரெடியா இருக்கு. 25 படங்களில் நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்பவும் நான் பிசியான காமெடி நடிகன் தான்.

என்னத்த பெருசா சாதிச்சிட்டார்...

என்னத்த பெருசா சாதிச்சிட்டார்...

வடிவேலு காமெடியில பெருசா சாதிச்சிட்டதா சொல்றாங்க. அவர் ஒண்ணும் தனியா சாதிக்கல. நாங்க பத்து பேர் சேர்ந்து யோசித்து செய்தோம்.

பிளான் பண்ணி நடிச்சோம்ய்யா!

பிளான் பண்ணி நடிச்சோம்ய்யா!

கதைக்கு தக்கபடி யாருக்கு என்ன கேரக்டர்? யார் எப்படி நடிக்கணும்னு பிளான் பண்ணி பண்ணினோம். அது ஹிட்டாச்சு.

எங்க தைரியம் இருந்தா தனியா வந்து பண்ணு பாப்போம்

எங்க தைரியம் இருந்தா தனியா வந்து பண்ணு பாப்போம்

இப்போது வடிவேலுவை தனியாக காமெடி பண்ணச் சொல்லுங்க பார்ப்போம். பார்க்க ஆள் இருக்காது.

என்னையும் கூப்பிட்டாங்களே...

என்னையும் கூப்பிட்டாங்களே...

என்னையும் சில பேரு ஹீரோவா நடிக்க கூப்பிட்டாங்க. என்னோட உயரம் எனக்குத் தெரியும். ஹீரோன்னா பைட் பண்ணனும், டான்ஸ் ஆடனும், அதெல்லாம் இந்த வயசுல செய்ய முடியுமா. தேவையில்லாம ரிஸ்க் எடுத்து எதுக்கு சிலபேர் மாதிரி இருக்கிறதையும் கெடுத்துக்கணும் என்றார் சிங்கமுத்து.

"சிங்கம்" களம் இறங்கிருச்சு.. "தெனாலிராமனின்" பதில் என்னவோ....!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X