twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிங்கமுத்து ஓட்டம்; வடிவேலு பொம்மை எரிப்பு! - பிரச்சார கலாட்டா!

    By Sudha
    |

    Singamuthu and Vadivelu
    ஸ்ரீரங்கம்: தமிழக முதல்வர் கருணாநிதியைப் பற்றி தரக்குறைவாகப் பேச முயன்ற சிங்கமுத்துவை திமுகவினர் உதைக்க முயன்றதால், பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார் சிங்கமுத்து.

    அதேபோல, தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்ததற்காக நடிகர் வடிவேலுவின் உருவ பொம்மையை தேமுதிகவினர் சிலர் திருச்செங்கோட்டில் எரித்தனர்.

    சிங்கமுத்து...

    ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட உத்தமர்சிலி, பனையபுரம் இடங்களில் நேற்று இரவு 9 மணிக்கு பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.

    பிரச்சாரத்தின் போது அவர் நடிகர் வடிவேலுவையும், குஷ்புவையும் மோசமாக விமர்சித்து பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் முதல்வர் கருணாநிதியைப் பற்றி பேச முற்பட்டார்.

    அப்போது திமுகவைச்சேர்ந்த கலைச்செல்வன், "டேய் கலைஞரை பற்றி பேசுனா கொன்னுடுவேன்"" என்று சொல்லிவிட்டு கொடிக் கம்பத்தை பிடுங்கிக் கொண்டு சிங்கமுத்துவை அடிக்க வந்தார். அவருடன் மேலும் சில திமுகவினரும் வந்தனர்.

    உடனே அதிமுகவினர் புடை சூழ அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் சிங்கமுத்து. அதன் பின்னர் அதிமுகவினர் கலைச்செல்வனை தாக்கினர். கலைச்செல்வனும் பதிலுக்கு தாக்கினார்.

    இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. கலைச்செல்வன் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அதிமுகவினர் ஸ்ரீரங்கம் தொகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வடிவேலு பொம்மை...

    இதே நேரம், தேமுதிக தலைவர் விஜயகாந்தை தரக்குறைவாக பேசியதாக குற்றம் சுமத்தி நடிகர் வடிவேலுக்கு எதிராக திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருச்செங்கோடு - மௌசி பகுதியில் தேமுதிக தொண்டர்கள் ஆவேசத்துடன் வடிவேலுவின் உருவ பொம்மையை எரித்தனர். போலீசார் வருவதற்குள் தேமுதிகவினர் ஓடிவிட்டனர்.

    English summary
    Actor Singamuthu ran away from the campaign spot due to the strong opposition from DMK cadres when he was trying to attack Chief Minister Karunanidhi and his family. Meanwhile, in Thiruchengode, some of the DMDK cadres burnt the effigy of actor Vadivelu for his continuous blast on DMDK chief Vijayakanth in his campaign.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X