விஜயகாந்த்துக்கு கால் அமுக்கி விட்ட வடிவேலு விமர்சிப்பதா?-சிங்கமுத்து பாய்ச்சல்

By Sudha

Singamuthu
விழுப்புரம்: சின்னக் கவுண்டர் படத்தில் விஜயகாந்த்துக்கு கால் அமுக்கி விட்ட வடிவேலு அவரை விமர்சிப்பதா என்று கடுமையாக தாக்கியுள்ளார் நடிகர் சிங்கமுத்து.

திருக்கோவிலூரில் தேமுதிக வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து சிங்கமுத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

சின்ன கவுண்டர்ல கேப்டனுக்கு கால் அமுக்கி விட்டவர் வடிவேலு. நாங்க செஞ்ச பாவம், ஒண்ணும் தெரியாத வடிவேலுவுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தது தான். விஜயகாந்த்தை திட்ட உனக்கு எந்த தகுதியும் கிடையாது. திருமாவளவனும், ராமதாசும் குஷ்புவை தமிழகத்த விட்டே விரட்டணும்ன்னு சொன்னாங்க. இப்ப அவங்களே ஓட்டு கேட்க சொல்றாங்க.

விலைவாசியை குறைக்கத்தான் ஜெயலலிதா தலைமையில் விஜயகாந்த் கூட்டணி அமைத்துள்ளார். அம்மா சொன்னாங்க தொலை நோக்கு பார்வையோடு வருமானம் வரமாதிரி திட்டம் தீட்ட வேண்டும்ன்னு. அதனால் தான் மக்களின் வருவாயை பெருக்கக்கூடிய ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

விலைவாசியை குறைக்கத்தான் ஜெயலலிதா தலைமையில் விஜயகாந்த் கூட்டணி அமைத்துள்ளார். கிரைண்டர் தரேன், மிக்சி தரேன் என்று சொன்னா, கரன்ட் இல்லாம கைய வச்சிக்கிட்டா ஆட்றது. அதுக்குதான் ஜெயலலிதா சொன்னாங்க முதலில் கரென்ட்ட குடுங்க, அப்புறம் மிக்சி கிரைண்டர்லாம் குடுக்கறது இருக்கட்டும்ன்னு...

ஒரு ரூபாய் அரிசி வாங்கன உடனே, பக்கத்துலயே வந்து நிக்கற கவுன்சிலர், ரெண்டு ரூபாய்க்கு வாங்கி கடத்திப்புடறான். அம்மா சொன்னாங்க தொலை நோக்கு பார்வையோடு வருமானம் வரமாதிரி திட்டம் தீட்ட வேண்டும்ன்னு. அதனால் தான் மக்களின் வருவாயை பெருக்கக்கூடிய ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் என்றார் சிங்கமுத்து.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X