மூஞ்சியில அடிச்ச ஆசிட் எங்க.. சிங்கப்பெண்ணை இப்படி ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான பிகில் படத்தில் ஆசிட் அடிக்கப்பட்ட அனிதா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரெபா மோனிகா.
தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற உடையில், Yellove என பதிவிட்ட ரெபா மோனிகாவின் அழகை பார்த்து பல ரசிகர்கள் பாராட்டி வந்தாலும், சில ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
ஆசிட் எங்க?
அழகு பதுமையாக ரெபா மோனிகா கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்து பலரும் ஐ லவ் யூ என்றும் அழகா இருக்கிறீங்க என்றும் கருத்து பதிவிட்டு வந்த நிலையில், இந்த நெட்டிசன், இன்னும் பிகில் ஃபீவரில் இருந்து வெளியே வரவில்லை போல, வடிவேல் புகைப்படத்தை போட்டு, மூஞ்சியில அடிச்ச ஆசிட் எங்க என கலாய்த்துள்ளர்.
ஓவர் ஃபீலிங்
அந்த ட்ரோலை விட, மூஞ்சியில ஆசிட் அடிக்கும் போது இவங்களுக்கு எவ்ளோ எரிஞ்சிருக்கும் என குழந்தை ஃபீல் பண்ணும் ஜிஃப் இமேஜை போட்டு இந்த நெட்டிசன் ஓவராக ஓட்டியுள்ளார்.
சிஎஸ்கே ஃபேனா?
மஞ்சள் நிற டிரஸ்ஸை யார் போட்டு வந்தாலும், உடனே சி.எஸ்.கே ஃபேனா என கேட்பதற்கென்றே ட்விட்டரில் வலம் வரும் க்ரூப்பின் தலைவர் போல இவர். மஞ்சக்காட்டு மைனாவாக இருக்கும் ரெபா மோனிகாவை பார்த்து சிஎஸ்கே ஃபேனா என கேட்கிறார். பாஸ் அடுத்த ஐபிஎல் வர இன்னும் டைம் இருக்கு..
சிங்கப்பெண்ணே
ஃபெண்டாஸ்டிக் சிங்கப்பெண்ணே என பாராட்டியுள்ள இந்த நெட்டிசன், இந்த சிங்கப்பையன் எப்பவும் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பேன் என்றும், மாடலிங் போட்டோஷூட் பண்ணும் ஐடியா இருந்தா சொல்லுங்களேன், சேர்ந்து பண்ணலாம் என கூட நின்னு போட்டோ எடுத்துக்கறதுக்கு அடிபோடுது இந்த பக்கி.
தப்பு
காமெடியாக இருந்தாலும், ஓரளவுக்குத் தான் கலாய்க்க வேண்டும். ஆசிட் அடிப்பது குற்றச்செயல். சினிமாவில் அவர் நடித்த கதாபாத்திரத்தை நிஜ வாழ்வோடு ஒப்பிட்டு ட்ரோல் செய்யப்படுவதை ரசிகர்கள் நிறுத்திக் கொள்வது தான் நல்லது.


Click it and Unblock the Notifications











