சிங்கப்பூரின் பெருமையை சொல்லும்… டூலெட் பட நாயகனின் தீபாவளி ஆல்பம் சாங் !

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் 30 நாட்களுக்கு முன்பே தீபாவளி களைகட்டத் தொடங்கிவிடும். அதற்குகாரணம் சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா கடைத்தொகுதிகளில் வண்ண வண்ண விளக்குகளால் சாலைகளை அலங்கரித்து ஒளியூட்டியிருப்பார்கள்.

மிகப்பெரிய தீபாவளிச்சந்தை இருக்கும். இந்த ஆண்டு இந்த சந்தை இல்லை. சிங்கப்பூரில் இருந்து அருகிலுள்ள மலேசியா, பாத்தாம், இந்தோனேசியா, தாய்லாந்து என தீபாவளி கொண்டாட்டத்திற்கு பறந்து செல்வார்கள். அதுபோலவே அந்த நாடுகளிலும் இருந்து சிங்கப்பூருக்கு தீபாவளி கொண்டாட பறந்துவருவார்கள்.

இந்த ஆண்டு கொரோனாவால் நாடுகளுக்கு இடையே பயணித்து கொண்டாடுவது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் எல்லோரும் லிட்டில் இந்தியா கடைத்தெருக்களில் ஆயத்த ஆடைகளை, பலகாரங்களை வாங்க வந்த வண்ணமிருப்பது கொண்டாட்ட உணர்வினை அதிகரிக்கிறது.

ஆண்டுதோறும்

ஆண்டுதோறும்

டூலெட் திரைப்பட நாயகன் சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று செல்லமாக அழைக்க கூடிய சந்தோஷ் நம்பிராஜன் 2019 ஆம் ஆண்டு தீபாவளிப்பாடல் மற்றும் 2020 ஆண்டு பொங்கல் பாடலை வெளியிட்டிருந்தார். லிட்டில் இந்தியாவின் ஒளியூட்டுப்போல ஆண்டுதோறும் தீபாவளிப்பாடல் தொடர வேண்டும் என்று இந்த ஆண்டும் ஒரு அழகான கொண்டாட்டமான தீபாவளி பாடலை வெளியிட்டுள்ளார்.

கோப்பிகடை

கோப்பிகடை

கவிஞர் அ.பிரபாதேவி எழுதியுள்ள இந்தத் தீபாவளி பாடலுக்கு இசைமணி பரசுகல்யாண் இசையமைத்துப் பாடியுள்ளார். நம்பிராஜன் இண்டர்நேஷனல் சினிமாஸ் & கோப்பிகடை இணைந்து தயாரித்துள்ள இந்தப்பாடலுக்கு பிரேம்குமார் ஒளிப்பதிவாளராகவும் , தியாகராஜன் எடிட்டிங் செய்திருக்கிறார். மிகவும் அழகான ஒரு துள்ளல் பாடலாக இந்த தீபாவளி பாடல் அமைந்தது அனைவருக்கும் பெருமையே. காப்பி கடை என்று சொல்லும் வார்த்தை வட்டார வழக்கு படி கோப்பி கடை என்று பெயரிட்டு பல இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக செயல் பட்டு வருகிறது

மொழியின் சிறப்பு

மொழியின் சிறப்பு

சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் அனைவரும் உற்சாகமாக பல ஆல்பம் சாங்ஸ் கேட்பது வழக்கம் . அந்த வகையில் இந்த பாடலும் தங்களது ஹிட் லிஸ்டில் இடம் பிடித்து இருக்கிறது என்று பலரும் சொல்லும் பொழுது இயக்குனருக்கு பெருமை சேருகிறது . ஒட்டு மொத்த குழுவும் இந்த கொரானா காலகட்டத்தில் அயராது உழைத்து மிகவும் நேர்த்தியாக தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த பாடலை வடிவமைத்து உள்ளது அனைவருக்கும் பெருமை சேர்த்து உள்ளது . தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழனின் பெருமையும் அற்புதமான வரிகளில் கொடுத்து உள்ளார்கள்

கதாநாயகன் அந்தஸ்து

கதாநாயகன் அந்தஸ்து

கலாச்சார ரீதியாக சிங்கப்பூரின் பெருமையை சொல்லி மிகவும் எளிமையான வார்த்தைகள் மூலம் மெட்டு அமைத்து இசை பிரியர்களுக்கு தீபாவளி பரிசாக இந்த பாடலை கொடுத்தது இயக்குனரின் டைமிங் மற்றும் சாமர்த்தியத்தை காட்டுகிறது . டுலெட் படம் தனக்கு ஒரு கதாநாயகன் அந்தஸ்து கொடுத்து இருந்தாலும் தனக்கு என்று பல விஷயங்களில் ஈடுபட்டு பன்முகம் கொண்ட சிந்தனையாளராக சந்தோஷ் நம்பிராஜன் இந்த பாடலை வடிவமைத்து இருக்கிறார் . பல வீடுகளில் , பல பயணங்களில் இந்த பாடல் காலர் ட்யூனாக மாறும் என்ற நம்பிக்கையில் இந்த குழு காத்து கொண்டு இருக்கிறது . தீபாவளி 2020 யை இந்த துள்ளல் பாடலுடன் பல குடும்பங்களும் இளைஞர்களும் சிங்கப்பூர் மற்றும் பல நாட்டு தமிழர்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள் என்று வாழ்த்துவோம் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X