பிக்பாஸ் பெண் போட்டியாளர்கள்.. லிஸ்ட்டில் இடம்பெற்ற சிங்கப்பூர் பெண் மாடல்!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 இன்று மாலை பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் ஒரு திருநங்கை உள்பட 20 பேர் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நேற்றிரவே பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டனர். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்களாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை 5 சீசன்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்த சீசனிலும் 20 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை இந்தப் போட்டிக்காக தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

100 நாட்கள்.. 20 போட்டியாளர்கள்
அடுத்துவரும் 100 நாட்களும் இந்த 20 போட்டியளர்களின் சுகதுக்கங்கள், இன்ப துன்பங்கள், கோபதாபங்கள், உணர்ச்சி கொந்தளிப்புகளை காண்பதற்காக தற்போது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இவர்களில் வெறுப்பை உமிழப் போவது யார், அன்பை கொடுக்கப் போவது யார், காதலை பகிரப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தொகுப்பாளர் கமல்ஹாசன்
தன்னுடைய வீட்டில் நடப்பதைக் காட்டிலும் அடுத்தவர் வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகள் குறித்து அறிந்துக் கொள்ளும் மக்களின் ஆர்வத்தை மையமாக கொண்டு இந்த நிகழ்ச்சி கடந்த 5 சீசன்களை கடந்து தற்போது 6வது சீசனிலும் அடியெடுத்து வைக்கவுள்ளது. கடந்த 5 சீசன்களை தொகுத்து வழங்கியதை போலவே இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுக்க உள்ளார்.

அடுத்தடுத்த ப்ரமோக்கள்
இதையொட்டி கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. இன்றைய தினமும் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்கவிழாவையொட்டி இரண்டு ப்ரமோக்களை இதுவரை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், அதன் பங்கிற்கு அதிலும் ப்ரமோக்கள் வெளியாகி வருகிறது.

10 பெண் போட்டியாளர்கள்
இந்த சீசனில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை பங்கேற்கவுள்ள நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த பெண் மாடல் நிவாஷினி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இவர் டிஜிட்டல் மீடியாவில் செயல்பட்டு வருகிறார்.

மாடல் நிவாஷினி
இவர் உண்மை கண் தேடுதே என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். மாடலிங்கில் சிறப்பாக செயல்பட்டுவரும் நிவாஷினி பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஆடிஷன் மூலம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இவரைப் போலவே டிக்டாக் பிரபலம் தனலட்சுமியும் ஆடிஷன்மூலம் தேர்வாகி பங்கேற்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications











