Singapore Saloon vs Blue Star Box Office: சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார்.. வசூலில் முந்தியது யார்?
சென்னை: ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் மற்றும் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் என இரு படங்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று வெளியாகின. தைப்பூச விடுமுறை நாளாக இருந்தும் இரண்டு படங்களுக்கும் பெரிய அளவில் தியேட்டர்களில் வரவேற்பு இல்லை என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு படங்கள் நேருக்கு நேர் மோதிய நிலையில், எந்த படத்துக்கு அதிக வசூல் என்பது குறித்த தகவலை இங்கே காணலாம்.
ஆர்ஜே பாலாஜி, மீனாக்ஷி சவுத்ரி, சத்யராஜ் நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்குநர் கோகுல் இயக்கி இருந்தார். பா. ரஞ்சித் தயாரிப்பில் அவரது நண்பர் ஜெயக்குமார் இயக்கிய ப்ளூ ஸ்டார் திரைப்படம் கிரிக்கெட் அரசியலை மையப்படுத்தி வெளியானது.

ஆரம்பத்திலேயே அடி: 2023ம் ஆண்டு துவக்கமே அஜித், விஜய் படங்களாக இருந்த நிலையில், சினிமா துறையும் தியேட்டர் உரிமையாளர்களும் சந்தோஷத்தில் மூழ்கினர். ஆனால், 2024 பொங்கல் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட பண்டிகைகளை குறிவைத்து வெளியாகி உள்ள படங்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை என்றே தெரிகிறது. சிவகார்த்திகேயனின் அயலான் 75 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், கேப்டன் மில்லர் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் 80 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர். தெலுங்கில் இரு படங்களும் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ள நிலையில், அங்கே வரவேற்பு எப்படி இருக்கப் போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்க்க வேண்டும்.
ப்ளூ ஸ்டார் vs சிங்கப்பூர் சலூன்: விமர்சன ரீதியாக ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தை சற்றே ஓவர்டேக் செய்திருக்கிறது அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம். ஆனால், வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு இரண்டு படங்களுக்குமே இல்லை என்றே பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் சலூன் முதல் நாள் வசூல்: இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, மீனாக்ஷி சவுத்ரி, சத்யராஜ், லால், ஜான் விஜய், கிஷன் தாஸ் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ், அரவிந்த் சாமி மற்றும் ஜீவா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் முதல் நாளில் வெறும் 1 கோடி வசூல் மட்டுமே ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 4 நாட்கள் விடுமுறை என்பதால் 4 கோடி வசூலை முதல் வாரத்தில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளூ ஸ்டார் முதல் நாள் வசூல்: பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கிய கிரிக்கெட்டை மையமாக வைத்து அரசியல் பேசிய ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு எதிரும் புதிருமாக நடித்துள்ளனர். அசோக் செல்வனை இந்த படத்தில் நடித்த போது தான் கீர்த்தி பாண்டியன் காதலித்தார். படம் வெளியாகும் முன்பே இருவரும் கணவன் மனைவியாகி விட்டனர். ப்ளூ ஸ்டார் திரைப்படம் முதல் நாளில் வெறும் 60 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வார இறுதியில் படம் பெரிதாக பிக்கப் ஆகுமா என்பதை வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











