ஏப்ரல் 2 வெளியாகும் சுல்தான்.. சிங்கப்பூர், இலங்கையில் அமோக வரவேற்பு!
சென்னை : தமிழ்நாட்டை தொடர்ந்து ஸ்ரீலங்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் சுல்தான் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
கார்த்தி, ரஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால்,யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கிறது.
இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சுல்தான் ஏப்ரல் 2ஆம் தேதி இந்தியா மட்டுமல்லாமல் ஸ்ரீலங்கா,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் பல திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

யோகிபாபு
பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமான தயாரிப்பு என சுல்தான் உருவாகி இப்பொழுது ரிலீஸுக்கு தயாராக உள்ளது சுல்தான். நடிகை ரஷ்மிகா மந்தனா தமிழில் முதல்முறையாக அறிமுகமாகும் இந்த திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே பெரும் வரவேற்பு இருக்க இதில் நடிகர்கள் நெப்போலியன், லால், யோகிபாபு,சிங்கம்புலி, சென்றாயன் என பலர் நடித்துள்ளனர்.

வசூலைக் குவித்து
கார்த்தியின் திரைப்படங்களை தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடப்படுகிறதோ அதே போல ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் கொண்டாடப்பட அங்கும் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கும் கார்த்தி தன்னுடைய அனைத்து திரைப்படங்களையும் தெலுங்கிலும் டப்பிங் செய்து ஒருசேர வெளியிட்டு வசூலைக் குவித்து வருகிறார்.

சிங்கப்பூர் மற்றும் ஸ்ரீலங்கா
கொரோனா லாக்டவுனால் சுல்தான் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருக்க இப்பொழுது இறுதியாக வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது. அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் சுல்தான் தமிழகத்தில் வெளியாவதற்கு இணையாக சிங்கப்பூர் மற்றும் ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளிலும் ஏப்ரல் 2ஆம் தேதி பல திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

டிக்கெட் புக்கிங் படு ஜோர்
மேலும் சிங்கப்பூர், ஸ்ரீலங்காவில் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது பற்றிய முழு லிஸ் தற்பொழுது வெளியாகி இருக்க அங்கு உள்ள அனைத்து ரசிகர்களும் சுல்தான் படத்தை ஏப்ரல் 2ஆம் தேதி காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க தற்போதுலிருந்தே டிக்கெட் புக்கிங் படு ஜோராக நடைபெற்றுக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications











