லிங்கா 'சிங்கா'தான் இப்போ விமலுக்கு காட்ஃபாதர்!
Recommended Video

ரஜினியின் லிங்கா படத்துக்கு ஏழரையைக் கூட்டிய சிங்காரவேலனை நினைவிருக்கிறதா... படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்குக் கூட கிடைக்காத பட்டப் பெயர் இவருக்குக் கிடைத்தது.. லிங்கா சிங்காரவேலன் என்று.
கொஞ்ச நாள் அமைதியாக இருந்தவர், இப்போது அடுத்தடுத்து படங்கள் தயாரிப்பது, ஃபைனான்ஸ் பண்ணுவது என பிஸியாகி வருகிறார். குறிப்பாக நடிகர் விமல் படங்களுக்கு காட்ஃபாதர் ரேஞ்சுக்கு வந்துவிட்டார்.

கடந்த ஜனவரியில் விமல் நடித்த 'மன்னர் வகையறா' படம் வெளியானது. இன்னும் சில அரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. விமலைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய விஷயம்.
இந்தப் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருப்பதன் பின்னணியில் முக்கிய நபராக இருப்பவர் சிங்காரவேலன்தான். ஒருவிதத்தில் 'மன்னர் வகையறா' படம் வெளியாகவே இவர்தான் காரணமாம். விமலின் 'ஜன்னலோரம்' பட இழப்பீடு விவகாரம் மன்னர் வகையறா பட வெளியீட்டை பாதிக்கும் அளவுக்குத் தலைதூக்க, தனது கையில் இருந்து 2 கோடி ரூபாய் கொடுத்து எந்தவித சிக்கலுமின்றி 'மன்னர் வகையறா' வெளிவர உதவினாராம் சிங்காரவேலன்.

அடுத்ததாக விமலின் நடிப்பில் தயாராகிவரும் 'கன்னிராசி' படத்தை வெளியிடும் உரிமையையும்
சிங்காரவேலனே வாங்கியுள்ளார். படம் மார்ச் மாதம் வெளியாகிறது.
அதுமட்டுமல்ல, இனி விமல் நடிக்கும் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ்
கொடுத்து உதவிக்கரமும் நீட்ட முன்வந்துள்ளார் சிங்காரவேலன். மேலும் அப்படி தயாராகும்
விமலின் படங்களை வெளியிடும் உரிமையையும் தானே வாங்கிக்கொள்ளவும் முடிவு செய்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











