Don't Miss!
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Sports பும்ராவையே மிஞ்சிட்டாரு.. வெறும் 16 ரன்களுக்கு 5 விக்கெட்ஸ்.. கம்பேக்கில் அசத்திய சந்தீப் சர்மா!
- Automobiles ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- News கவனம் மக்களே.. திறந்து கிடந்த தண்ணீர் தொட்டி.. தவறி விழுந்த ஹைதராபாத் ஐடி ஊழியர் பரிதாபமாக பலி!
- Lifestyle உங்க உடலில் இந்த பிரச்சினை இருந்தால் சர்க்கரை நோயால் உங்க கிட்னி டேமேஜ் ஆகிருச்சுனு அர்த்தமாம்...கவனமா இருங்க!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கமல் பாராட்டியது இருக்கட்டும் கீர்த்தியை யார் பாராட்டியிருக்கிறார் என்று பாருங்க
Recommended Video
சென்னை: கீர்த்தி சுரேஷை பிரபல இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் பாராட்டியுள்ளார்.
சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகமாகவே மாறியுள்ளார். இந்த புள்ளைக்குள்ள இப்படி ஒரு திறமையா என்று வியக்காதவர்களே இல்லை.
இந்நிலையில் கீர்த்திக்கு மிகப் பெரிய கவுரவம் கிடைத்துள்ளது.
பாராட்டு
கமல் ஹாஸனை வைத்து அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் கீர்த்தி சுரேஷை பாராட்டியுள்ளார்.
சாவித்ரி
சாவித்ரிகாருவுடன் நான் சேர்ந்து எடுத்த புகைப்படம் உள்ளதா என்று பலரும் கேட்கிறார்கள். அப்பொழுது இல்லை ஆனால் தற்போது இருக்கிறது என்று கூறி தான் கீர்த்தியுடன் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்.
என்ன வேண்டும்?
சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் படத்தில் நடிக்க பல பிரபலங்கள் ஏங்கிய நிலையில் அவர் கீர்த்தியை சாவித்ரி என்று கூறியிருப்பது கீர்த்திக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதை விட கீர்த்திக்கு வேறு என்ன வேண்டும்.
எதிர்பார்ப்பு
நடிகையர் திலகம் படத்திற்காக கீர்த்திக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீனிவாச ராவ் பாராட்டியதே அவருக்கு பெரிய விருது கிடைத்தது போல தான் என்கிறார்கள் திரையுலகினர்.