ஹெட்போனால் வந்த வினை.. அரியவகை நோயால் 90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் பாடகி பாதிப்பு! ரசிகர்கள் அதிர்ச்சி!

மும்பை: வளர்ந்து வரும் அது நவீன உலகில் பெரும்பாலானோர் கையில் ஸ்மார்ட் ஃபோன் உள்ளது. இதனால் ஹெட்போன் இயர் பட்ஸ் வைத்திருப்பவர்கள் ரொம்பவே அதிகமாக உள்ளனர். ஹெட்போனில் அதிகப்படியான சத்தத்தை வைத்து பாடல்கள் கேட்கும் போதோ அல்லது படங்கள் பார்க்கும்போதோ ஏற்படப்போகும் செவித்திறன் பாதிப்புகள் குறித்து பெரும்பாலான ஸ்மார்ட் போன் யூசர்களுக்கு தெரிவதில்லை. இது குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தாலும் ஒரு சில அதனை பெரிதாக பொருட்படுத்துவது இல்லை.

இது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதற்கு தற்போது இந்தி உலகின் பிரபல பாடகியாக இருந்து வரும் அல்கா யாக்னிக் உதாரணம் ஆகியுள்ளார். 1980-களில் பாலிவுட் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானார் அல்கா யாக்னிக். தனது தனித்துவமான குரலால் மக்களை வசீகரிக்க கூடிய பாடகியானார். இதனால் 90-களில் வெளியான பெரும்பாலான இந்தி படங்களில் பாடியிருந்தார். 90-களில் வெளியான பாடல் படங்களில் அதிகம் பாடி இருப்பதால் இவர் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சிங்கராகவே இன்றைக்கும் இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. 1100 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள அல்கா ஆக்னிக் கிட்டத்தட்ட 2500 பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழிலும் சில பாடல்களை பாடியுள்ளார். அதில் ஓரம் போ படத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் பாடிய "இது என்ன மாயம்" பாடல் ஹிட்டானது.

Singer

அல்கா இன்ஸ்டாகிராம் போஸ்ட்: இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதன் கீழ் மிகவும் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் "சில நாட்களுக்கு முன்பு நான் விமானத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தேன். அப்போது என்னால் எதையுமே கேட்க முடியவில்லை. எனது காதுகளில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்பதை உணர்ந்தேன். மருத்துவரை தொடர்பு கொண்ட போது. அவர்கள் என்னை பல கட்டங்களாக பரிசோதித்தனர். அதன் பின்னர் நரம்பு வலி செவித்திறன் பாதிப்பு இருப்பதாக கூறினர். எனவே இந்த தகவலை எனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களாகிய உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடிவெடுத்தேன்.

Singer

ஹெட்போனால் வந்த வினை: இந்த செவித்திறன் குறைபாடு ஒருவகை வைரசால் ஏற்படக்கூடிய குறைபாடு. எனக்கு இப்படியான ஒரு பாதிப்பு வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இந்த நிலையில் இருந்து மீண்டு வர இதனை நிதானமாகவே கையால நினைக்கின்றேன். இதிலிருந்து நான் விரைவில் குணமாகி வெளிவர எனக்காக நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். எனது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதிகப்படியான சத்தத்தை வைத்து ஹெட் போன் பயன்படுத்தும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எனக்கு இதனால்தான் இந்த பாதிப்பு வந்திருக்கக் கூடும் என மருத்துவர்கள் கூறினார்கள்.

அரியவகை நோய்: நான் இந்த நிலையில் இருந்து மீண்டு வந்து அதை உங்களிடம் தெரிவிக்கும் வரை எனக்காக நீங்கள் பக்கபலமாக இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் இவ்வாறு அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் ஆல்கா யாக்னிக் தெரிவித்துள்ளார். அல்கா யாக்னிக்கிற்கு வந்துள்ள செவித்திறன் குறைபாடு என்பது அரிய வகை செவித்திறன் குறைபாடு என்றும் இதில் அச்சத்தில் 5 முதல் 20 நபர்கள் வரை இந்த குறைபாட்டால் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: singer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X