எவ்வளவு கார் இருந்தாலும் விஜய்க்கு பிடித்த வாகனம் இதுதானாம்.. அவங்க அம்மாவே சொன்ன தகவல்!

சென்னை : நடிகர் விஜய் அடுத்தடுத்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் நல்ல வசூலை பெற்றது.

இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். சில படங்கள் அவரது கணிப்புகளையும் பொய்யாக்கி விடுகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம் பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் என வெற்றிப் படங்களை கொடுத்த நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தின் திரைக்கதையில் சொதப்பியுள்ளார்.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்வேட்டை நடத்தியுள்ளது. 50 நாளில் 227 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் தன்னுடைய ரசிகர்களின் சிறப்பான ஆதரவுடன் வெற்றிப்படமாக்கி காட்டியுள்ளார் நடிகர் விஜய்.

தளபதி 66 படம்

தளபதி 66 படம்

தொடர்ந்து தற்போது பிரபல இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். வம்சி முன்னதாக கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடிப்பில் தோழா படத்தை தமிழில் இயக்கியவர். இந்நிலையில் தற்போது விஜய்யின் 66வது படத்தை இயக்கிவருகிறார் வம்சி. இந்தப் படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

சென்னையில் சூட்டிங்

சென்னையில் சூட்டிங்

மேலும் ஆக்ஷன், காமெடியுடன், காதல், மோதல் என விஜய் படங்களுக்கே உரிய சிறப்பான அம்சங்களுடன் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது.

ரகசியத்தை வெளிப்படுத்திய ஷோபா

ரகசியத்தை வெளிப்படுத்திய ஷோபா

இந்நிலையில் விஜய் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். சிறப்பான கர்நாடக சங்கீத பாடகியான ஷோபா சந்திரசேகர், விஜய்க்கு பிடித்த வாகனம் குறித்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். வீட்டில் எவ்வளவு வாகனங்கள் இருந்தாலும் விஜய்க்கு இந்த வாகனம்தான் பிடிக்குமார்.

விஜய்க்கு பிடித்த சைக்கிள்

விஜய்க்கு பிடித்த சைக்கிள்

வீட்டில் எவ்வளவு கார்கள் இருந்தாலும் பள்ளிக்கு செல்ல எப்போதுமே விஜய் விரும்புவது சைக்கிள்தானாம். ஷோபா இதுகுறித்து கேள்வி எழுப்பினாலும் பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கு எதுக்கும்மா கார் என்று கேட்பாராம் விஜய். இதேபோல பள்ளிக்கு அவர் எடுத்துவரும் மதிய உணவு கேரியரை பார்த்துவிட்டு, தான் வீட்டிற்கே வந்து சாப்பிடும் பழக்கத்தை துவக்கினாராம்.

வாக்களிக்க சைக்கிளில் வந்த விஜய்

வாக்களிக்க சைக்கிளில் வந்த விஜய்

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் வந்தார் விஜய். இது ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஷோபா, டிவியில் பார்த்துதான் அதை தெரிந்துக் கொண்டதாகவும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்ததாகவும் குறிப்பிட்டார்.

Recommended Video

விஜய், கமல் சூட்டிங் ஸ்பாட்ல எப்படி நடந்துக்கொள்வார்? Lokesh Kanagaraj Pressmeet | Kamal | Vikram
சைக்கிள் டூ பைக்

சைக்கிள் டூ பைக்

கடந்த தேர்தலின்போது சைக்கிளில் வந்து வாக்களித்தார் விஜய். ஆனால் அவரை பின்தொடர்ந்து ஏராளமானோர் வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து விஜய்யை பாதுகாப்புடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து திரும்பும்போது விஜய் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X