உடல் நலக்குறைவால் சிகிச்சைப் பெற்றுவந்த.. பிரபல பாடகர் திடீர் மறைவு.. திரையுலகம் இரங்கல்!
கொச்சி: உடல் நலக்குறைவு காரணமாக பிரபல பாடகர் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர், கே.ஜே.முகமது பாபு என்ற ஜீரோ பாபு.
தனது நாடகங்களின் மூலம் பாடகராக பிரபலமானவர், கேரளாவில் நன்கு அறியப்பட்டவர்.

ஓப்பன் ஜீரோ
நாடகத்தில் இருந்து இசைத்துறைக்குத் திரும்பிய இவர், பிஜே தியேட்டர்ஸின் காட் அண்ட் மேன் என்ற நாடகத்தில், 'ஓப்பன் ஜீரோ வந்து கழிஞ்ஞால்' என்ற பாடலைப் பாடியிருந்தார். இந்தப் பாடல் ஹிட்டானதால், ஜீரோ பாபு என்று அறியப்பட்டார். 1980 -90 ஆம் காலகட்டங்களில் ஏராளமான பாடல்களை ஜீரோ பாபு பாடியுள்ளார்.

கபூலிவாலா
இவர் சுமார் 300 -க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக சித்திக் லால் இயக்கிய கபூலிவாலா என்ற படத்தில் நடித்திருந்தார். 2005 ஆம் ஆண்டில் கேரள சங்கீத நாடக அகாடமி விருது உட்பட ஏராளமான விருதுகளை ஜீரோ பாபு பெற்றுள்ளார்.

என் மனசில்
பொன்னாதும்பிகளும் பொன்வெளியும், என் மனசில், நக்ஷத்திரங்கள் சிம்மும் உட்பட சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சிங்கப்பூர், துபாய், மலேசியா உட்பட பல வெளி நாடுகளிலும் நாடகங்கள் நடத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக முதுமை காரணமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்.

அத்திகா பாபு
இந்நிலையில் கடந்த புதன்கிழமை அவர் உயிரிழந்தார். அவர் மறைவுக்குத் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த நடிகர், பாடகர், இசை அமைப்பாளர் ஜீரோ பாபுவுக்கு அத்திகா பாபு என்ற மனைவி, சுராஜ் பாபு, சுல்ஃபி பாபு, சபிதா சலாம், தீபத் நஸிர் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











