பிரபல டப்பிங் கலைஞர் மாரடைப்பால் திடீர் மரணம்.. சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி!

சென்னை: பிரபல டப்பிங் கலைஞரான கண்டசாலா ரத்னகுமார் மாரடைப்பால் காலமானார்.

பிரபல பாடகர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் இரண்டாவது மகன் கண்டசாலா ரத்னகுமார்.

பாடகர், டப்பிங் கலைஞர் என பல முகங்களை கொண்டவர் கண்டசாலா ரத்னகுமார்.

ஏராளமான பாடல்கள்

ஏராளமான பாடல்கள்

கடந்த 1978 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான காஞ்சி காமாட்சி படத்தின் மூலம் டப்பிங் கலைஞராக அறிமுகமானார். அதற்கு முன்பே தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

ஆயிரம் படங்களுக்கு மேல்

ஆயிரம் படங்களுக்கு மேல்

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா இண்டஸ்ட்ரியில் பாடகராகவும் டப்பிங் கலைஞராகவும் இருந்த கண்டசாலா ரத்ன குமார் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

10 ஆயிரம் எபிசோடுகள்

10 ஆயிரம் எபிசோடுகள்

மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எபிசோடுகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் கண்டசாலா ரத்னகுமார். 50க்கும் மேற்பட்ட டாக்குமென்ட்ரி படங்களுக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார் கண்டசாலா ரத்னகுமார்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் கண்டசாலா ரத்னகுமார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வெண்டிலேட்டர் சிகிச்சை

வெண்டிலேட்டர் சிகிச்சை

இதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா நெகட்டிவ் ஆனது. இந்நிலையில் திடீரென அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதானல் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உயிர் பிரிந்தது

உயிர் பிரிந்தது

இந்நிலையில் நேற்று திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மருத்துவமனையிலேயே கண்டசாலா ரத்னகுமாரின் உயிர் பிரிந்தது. அவரது மறைவு தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கண்டசாலா ரத்னகுமார் தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார். நந்தி அவார்டு உட்பட ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் கண்டசாலா ரத்னகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: cardiac arrest
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X