பைத்தியமானு கேட்டாங்க.. எனக்காக காத்திருந்தார்.. அனிதா குப்புசாமி சொன்ன காதல் கதை!
சென்னை: இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகராக வலம் வருபவர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தன்னுடைய நாட்டுப்புற இசையின் மூலம் ஒட்டு மொத்த நாட்டுப்புற மக்களின் மனதையும் கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்று உள்ளார். இவர் பாடகி அனிதா குப்புசாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
சென்னை பல்கலைக்கழக இசைத் துறையில் பயின்ற போது, குப்புசாமி எனக்கு சீனியராக இருந்தார். ஆனால், அவரைப் பார்த்தது இல்லை அப்போது தான், ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது அந்த இசை நிகழ்ச்சியில் அவர் பொற்காலம் படத்தில் வரும் தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடலை பாடினார். அவர் பாட பாட அங்கிருந்த மாணவர்கள் ஒன்ஸ்மோர் கேட்டுக்கொண்டே இருந்தனர். அப்போது தான் என் தோழியிடம் இது யார் என்று கேட்டேன். அவர் தான் இவர் என்று சீனியர் சொன்னார். அப்போதில் இருந்து ஒருவருக்கு ஒருவர் பழக்கம் ஏற்பட்டது.

புஷ்பவனம் குப்புசாமி: ஒரு நாள், அவர் ஒரு இசை நிகழ்ச்சியில் பாடுவதற்கு ஒரு பெண் குரல் தேவைப்பட்டது. அவர் அங்கிருந்த அனைத்து மாணவிகளிடமும் கேட்டார், அனுராதா ஸ்ரீராமை தேர்ந்தெடுத்து விட்டு என்னை நிராகரித்தார், ஆனால், குப்புசாமியின் குரலுக்கு ஈடுகொடுக்க முடியாது என்பதால், அனுராதா ஸ்ரீராம் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அப்போது தான் எனக்கு கோவம் வந்தது. எல்லார் கிட்டயும் கேட்கிறார். நம்மகிட்ட கேட்கவில்லையே என்று நானே போய், என்கிட்ட கேட்க மாட்டீங்களா என்று கேட்டேன். உடனே அவர் உங்களுக்கு தமிழ் தெரியுமா என்று கேட்டு, அன்றில் இருந்து இருவரும் ஒன்றாக பாடத்தொடங்கினோம்.
காதல் கடிதம்: அப்போது தான், எனக்கு குஷ்பு என்ற பெயரில் காதல் கடிதமாக வந்து கொண்டு இருந்தது. அப்போது தான் அந்த கடிதம் எழுதியது இவர் தான் என்று ஒருநாள் எனக்கு தெரியவந்தது. ஒரு நாள் பேருந்தில் சென்று கொண்டு இருக்கும் போது காதலிப்பதாக சொன்னார். அதன் பிறகு தான் அவர் பல ஆண்டுகளாக என்னை காதலிப்பது, மறைந்து மறைந்து சைட் அடித்தது எல்லாம் தெரிந்தது.
அவரை மிஸ் பண்ணேன்: ஆனால், எனக்கு அவர் மீது ஈடுபாடு இல்லை என்பதால், நோ சொல்லவிட்டேன். என்னுடைய குறிக்கோள் பின்னணி பாடகியாக மாற வேண்டும் என்று இருந்தது. என் கணவர் என்னை காதலிப்பது அவரின் வீட்டுக்கு தெரிந்து விட, அவரை அவங்க அப்பா வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார். அப்போதுதான் நான் அவரது குரலை மிஸ் செய்தேன். அப்போதுதான் இவர்தான் நமக்கான ஜோடி என்று நான் முடிவு செய்தேன். அவர் எனக்காக இரண்டு வருடங்கள் காத்திருந்தார்.
பைத்தியமா? இது குறித்து என்னுடைய குடும்பத்தில் கூறியபோது எல்லாரும் உனக்கு என்ன பைத்தியமா? அவர் கலர் என்ன, உன் கலர் என்ன என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள். எனக்கு அவருடைய திறமை மட்டும் தான் தெரிந்தது அவருடைய தோற்றமும் நிறமும் எனக்கு தெரியவில்லை, அதன் பின் வீட்டில் பல பிரச்சனைகள் நடந்து நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்றார். இந்த தம்பதிகளுக்கு பல்லவி, மேகா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











