Sawadeekaன்னா என்ன அர்த்தம் தெரியுமா.. அஜித் பாடலுக்கு புதிய விளக்கம் கொடுத்த அந்தோணி தாசன்!
சென்னை: நடிகர் அஜித்குமார், திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடாமுயற்சி படம் வரும் பொங்கல் ரிலீசாக ஜனவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அஜித்தின் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படம் வெளியாகவுள்ளதையடுத்து படத்தை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் சில மாத இடைவெளிகளிலேயே அஜித்தின் குட் பேட் அக்லி படமும் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ஆண்டின் துவக்கத்திலேயே ரிலீசாகவுள்ளதாக வரும் 2025ம் ஆண்டு அஜித்தின் ஆண்டாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக வெளியான நிலையில், இந்த ஆண்டில் அவரது விடாமுயற்சி படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூட்டிங்கில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் விடாமுயற்சி படம் சிக்கிய நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. லைகா நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படம் அடுத்த மாதம் 10ம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் ரோட் திரில்லர் படமாக விடாமுயற்சி உருவாகியுள்ளது.
விடாமுயற்சி படம்: இரண்டு ஆண்டுகள் கழிந்து அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தை கொண்டாட ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். இந்தப் படத்தினை தொடர்ந்து சில மாத இடைவெளிகளிலேயே அஜித்தின் அடுத்தப்படமான குட் பேட் அக்லி படமும் வெளியாகவுள்ளது. இந்த அடுத்தடுத்த படங்கள் இருவேறு ஜானர்களில் உருவாகியுள்ள நிலையில், இந்தப் படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி உள்ளது. அதற்கேற்ப இந்தப் படங்களில் அடுத்தடுத்த புகைப்படங்ள், டீசர், பாடல் உள்ளிட்டவை மிகப்பெரிய அளவில் ரசிகர்களை எதிர்பார்ப்புடன் காத்திருக்க வைத்துள்ளது.
பர்ஸ்ட் சிங்கிள்: குறிப்பாக விடாமுயற்சி படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த போஸ்டர்கள், புகைப்படங்கள், டீசர், பாடல் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு, அதிகமான கவனத்தை பெற்றுள்ளன. நேற்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே வைபை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை அனிருத்துடன் இணைந்து அந்தோணி தாசன் பாடியுள்ளார். லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ள இந்தப் பாடலில் Sawadeeka என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார்.
அந்தோணி தாசன் விளக்கம்: அது என்ன சவதீகா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவரும் நிலையில், இந்த வார்த்தைக்கு அந்தோணி தாசனே தற்போது விளக்கமளித்துள்ளார். இந்த வார்த்தைக்கு தாய்லாந்து மொழியில் Welcome என்பதுதான் அர்த்தமாம். இதேபோல Kapungaa என்றால் போய்ட்டு வாங்க என்று அர்த்தம் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ள தன்னை தாய்லாந்து மொழியிலும் அனிருத் பாட வைத்துள்ளதாகவும் ஆண்டனி தாசன் தெரிவித்துள்ளார். இன்னும் சில தினங்களில் விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ள நிலையில் விரைவில் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











