என் பொண்ணு பட்டம் வாங்கிட்டா.. அந்தோணி தாசனின் 2வது மகள் Convocation.. சந்தோஷத்தில் அப்பா!

சென்னை: 'சொடக்கு மேல சொடக்குப் போடுவேன்' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தை பிடித்துள்ளார் பாடகர் அந்தோணி தாசன். அவரது 2வது மகள் தெரசா பட்டம் வாங்கியுள்ள நிலையில், மகள் மற்றும் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா பட்டம் வாங்கிய போது அவருடைய அப்பா விஜய் செல்லவில்லை என்றும் அண்ணன் ஜேசன் சஞ்சய் தான் சென்றார் என வீடியோ காட்சிகள் சமீபத்தில் வைரலாகின.

Singer Anthony Dasan Second Daughter Theresa got degree in Bioethics
Photo Credit:

ஜேசன் சஞ்சய் உடன் எடுத்துக் கொண்ட போட்டோவை சமீபத்தில் அந்தோணி தாசன் வெளியிட்டது டிரெண்டான நிலையில், தற்போது அவரது மகள் பட்டம் வாங்கிய சந்தோஷத்தையும் ரசிகர்களுடன் ஷேர் செய்துள்ளார்.

கஷ்டப்பட்டு வளர்ந்த பாடகர்: சினிமாவில் சிலர் நெப்போ கிட்களாக எளிதில் அறிமுகமாகி விடுவார்கள். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், அப்பாவின் புகழ் வெளிச்சம் தான் எனக்கு எதிரியாக உள்ளது என முதலை கண்ணீர் வடிப்பார்கள். கடைசி வரை பெரிதாக சாதிக்க உழைக்கவே மனம் வராத நிலையில் இருந்து விடுவார்கள். ஆனால், இன்னொரு பக்கம் கஷ்டப்பட்டு உழைத்து எப்படியாவது முன்னேற வேண்டும் என்றும் தனது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என கலையை கையில் எடுத்து போராடிக் கொண்டே சாதிப்பார்கள். அப்படி சாதித்த நபர்தான் அந்தோணி தாசன். அவரும் அவரது மனைவி ரீட்டாவும் பல தடைகளை தாண்டி தங்கள் வாழ்வை மேம்படுத்தியுள்ளனர்.

பட்டம் வாங்கிய மகள்: அந்தோணி தாசனின் இளைய மகள் தெரசா Bioethics படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். அவருடைய பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சந்தோஷத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகாராஜா படத்தில் இடம்பெற்ற "அன்பான மகள் வந்தால் அம்பானி நான் ஆகிறேன்" என்கிற பாடலை போட்டு மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

விஜய் மகனுடன்: சமீபத்தில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உடன் எடுத்துக் கொண்ட போட்டோவையும் அந்தோணி தாசன் ஷேர் செய்தது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. சிக்மா படத்திலும் இவர் பாடியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முத்துக்காளை மகன் 12ம் வகுப்பு தேர்வில் வெற்றிப் பெற்று கல்லூரியில் சேர்ந்ததை நகைச்சுவை நடிகர் முத்துக்காளை வெளிப்படுத்தும் போது பலரும் வாழ்த்தினர். தற்போது அந்தோணி தாசனின் இளைய மகளையும் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X