Vijay Son: பாண்டி முனி வரான்.. ஜேசன் சஞ்சய் உடன் அந்தோணி தாசன்.. பேக்கிரவுண்ட் சாங் ஃபயரா இருக்கே!
சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் 'சிக்மா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். படத்தின் டீசர் வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையிலும், இன்னமும் படம் வெளியாகவில்லை. இந்நிலையில், அந்தோணி தாசன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
விஜய் மற்றும் சங்கீதாவின் மகனான ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அப்பாவின் இனிஷியல் Vஐ துறந்து அம்மாவின் முதல் எழுத்தான Sஐ தன்னுடன் இணைத்துக் கொண்டார் என பரபரப்பு கிளம்பியது.

அம்மாவை விட்டு விலகிய அப்பா விஜய்யுடன் ஜேசன் சஞ்சய் பேசுவது கூட இல்லை என ஏகப்பட்ட தகவல்கள் உலா வருகின்றன. ஆனால், அம்மா சங்கீதா எப்படி விஜய் விவகாரத்தில் அமைதியாக உள்ளாரோ அதே போலத்தான் இயக்குநரான பின்னரும் ஜேசன் சஞ்சய்யும் இன்னமும் அமைதியாகவே தனது பட வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
அப்பாவுடன் ஆட்டம்: வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற "நா அடிச்சா தாங்கமாட்ட" பாடலுக்குத்தான் முதன் முதலாக திரையில் தோன்றி அப்பா விஜய்யுடன் அசத்தலான ஆட்டத்தை ஜேசன் சஞ்சய் போட்டிருப்பார். இவரை ஹீரோவாக்க வேண்டும் என பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் உள்ளிட்டோர் முயற்சி செய்தும் ஜேசன் சஞ்சய் அப்பா போல ஹீரோவாகாமல் தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் போல இயக்குநராக முடிவு செய்துள்ளார்.
அந்தோணி தாசன் உடன் ஜேசன் சஞ்சய்: நடிகை த்ரிஷாவுடன் விஜய் திருமணத்தில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சங்கீதா விஜய் விவகாரத்தை விஜய் வொர்த் இல்லை என சொன்னது பிறகும் கூட சங்கீதா மற்றும் ஜேசன் சஞ்சய் விஜய்க்கு எதிராக எந்தவொரு அறிவிப்பையோ பிரஸ் மீட்டையோ வைக்காமல் அமைதி காத்து வருகின்றனர். இந்நிலையில், ஜேசன் சஞ்சய் உடன் அந்தோணி தாசன் எடுத்துக் கொண்ட போட்டோவை அந்தோணி தாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை குஷியாக்கி உள்ளார்.
பாண்டி முனி வரான்: மேலும், அந்த போட்டோவுக்கு பேக்கிரவுண்ட் மியூசிக்காக அந்தோணி தாசன் போட்டுள்ள "பாண்டி முனி வரான்" பாடல் கூஸ்பம்ப்ஸ் கொடுக்கிறது. சிக்மா படத்தில் கண்டிப்பாக அந்தோணி தாசன் ஒரு பாடல் பாடியுள்ளார் என தெரிகிறது. கருணாஸ் மகன் கென் இயக்கி நடித்துள்ள யூத் திரைப்படம் வரும் வாரம் திரைக்கு வருகிறது. ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடித்துள்ள 'சிக்மா' எப்போது வெளியாகும் என்கிற கேள்வியை தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். கூடிய சீக்கிரமே அதற்கான அப்டேட்டை ஜேசன் சஞ்சய் தருவார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











