அட்டை படத்தில் தெருக்குரல் அறிவு இடம்பெறாதது ஏன்… பிரபல பத்திரிக்கைக்கு பா.ரஞ்சித் கண்டனம் !

சென்னை : பிரபல ஆங்கில இதழான ரோலிங் ஸ்டோனின் அட்டைப்படத்தில் தெருக்குரல் அறிவின் படம் இடம் பெறாததற்கு இயக்குநர் பா. ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அட்டைப்படத்தில் தீ, ஷான் இருவரின் படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

நீயே ஒலி பாடலை எழுதியவரும், எஞ்சாய் எஞ்சாமி பாடலை எழுதியதுடன் பாடியவருமான தெருக்குரல் அறிவு மீண்டும் மறைக்கப்பட்டிருக்கிறார் என்று ரஞ்சித் குற்றம்சாட்டி உள்ளார்.

தெருக்குரல் அறிவின் படம் இல்லை

தெருக்குரல் அறிவின் படம் இல்லை

பிரபல இசை குறித்த மாத இதழான ரோலிங் ஸ்டோனின் இந்தியா பத்திரிகை எஞ்சாய் எஞ்சாமி, நீயே ஒலி ஆகிய பாடல்கள் குறித்து கவர் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டு இருந்தது. இது தொடர்பாக பாடகி தீ, ஷான் வின்சென்ட் டீ பால் ஆகியோரிடம் பேட்டி எடுத்து அவர்களின் புகைப்படத்தை அட்டைப் படத்தில் வெளியிட்டுள்ளது. நீயே ஒளி பாடலை எழுதியவரும், எஞ்சாயி என்சாமி பாடலை பாடியவருமான தெருக்குரல் அறிவின் படம் இந்த அட்டை படத்தில் இடம்பெறவில்லை.

பா ரஞ்சித் கண்டனம்

பா ரஞ்சித் கண்டனம்

ரோலிங் ஸ்டோனின் இந்த மாத பிரதியின் அட்டைப் படத்தை பார்த்த இயக்குநர் பா. ரஞ்சித் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நீயே ஒளி பாடலை எழுதியவரும், எஞ்சாய் எஞ்சாமி பாடலை எழுதியதுடன் பாடியவருமான தெருக்குரல் அறிவு மீண்டும் மறைக்கப்பட்டிருக்கிறார் என்று கூறி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

எஞ்சாய் என்சாமி

எஞ்சாய் என்சாமி

சந்தோஷ்நாராயணன் இசையில், தீ அறிவு இருவரும் பாடி நடித்த எஞ்சாய் என்சாமி என்ற பாடலின் வீடியோ மார்ச் மாதம் வெளியானது. இந்த பாடலை அறிவு எழுதி இருந்தார். சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஆரம்பித்துள்ள மாஜா தளத்தில் இப்பாடல் வெளியானது.

சாதனை படைத்தது

சாதனை படைத்தது

அழிந்து வரும், காடுகள், தாவரங்கள், கிளிகள், பூச்சிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் நிறைந்த வெப்பமண்டல காடுகளை இந்த வரிகள் உயிர்ப்பிக்கும் வகையில் அமைந்திருந்தது. ராப், மற்றும் நாட்டுப்புற இசை என இரண்டையும் கலந்த காம்போவாக இந்த பாடல் இருந்ததால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த பாடலை புகழ்ந்து தள்ளினர். யூடியூப் தளத்தில் இதுவரை 290 மில்லியன் பார்வையாளர்கள் இந்த பாடலை பார்த்துள்ளனர்.

நீயே ஒளி

நீயே ஒளி

இதேபோல நீயே ஒளி என்ற மற்றொரு பாடலும் மாஜா தளத்தில் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்த பாடலை, ஷான் வின்செட் டி பால் , நாவ்ஸ் 47, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். பாடலில் வீடியோவை எஸ்விடிபி மற்றும் கலைச்செல்வன் இயக்கி இருந்தார். மேலும், இந்த பாடலுக்கு தெருக்குரல் அறிவு அழகான பாடல் வரிகள் அமைத்திருந்தார். இந்த பாடல் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ஒடிடியில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற சார்பட்டா பரம்பரை படத்தில் இடம் பெற்றுள்ளது.

பலரும் ஆதரவு

ரோலிங் ஸ்டோனின் அட்டைப்படத்தில் தெருக்குரல் அறிவின் படம் குறித்து தனது கண்டனத்தை முதல் ஆளாக பதிவு செய்த இயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு பலரும் ஆதரவு செய்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X