இசை உலகை சோகத்தில் ஆழ்த்திய ஆஷா போஸ்லே மறைவு.. எமோஷனல் ஆன ஏ.ஆர். ரகுமான்

சென்னை: உலகப் புகழ்பெற்ற இந்திய பாடகி ஆஷா போஸ்லே வயது மூப்பு மற்றும் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 92. இவரது மறைவு மொத்த இந்திய திரையுலகத்தையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் ஆஷா போஸ்லேவுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, ஆஷா போஸ்லே அவரது குரல் மற்றும் வசீகரத்தால் என்றைக்கும் நம்முடன் வாழ்வார். திறமையான கலைஞர் மறைந்துவிட்டார்” என்று பகிர்ந்துள்ளார்.

Legendary Singer Asha Bhosle Passes Away at 92 AR Rahman and More Celebrities Pays Emotional Tribute

ஆஷா போஸ்லேவின் மறைவு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ இந்தியாவின் ஈடு இணையற்ற பின்னணிப் பாடகி, 'பத்ம விபூஷண்' ஆஷா போஸ்லே அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைகிறேன். பல தசாப்தங்களாகத் தனது வசீகரக் குரலால் இந்தியத் திரையிசையை ஆதிக்கம் செலுத்திய அவரது பயணம், நமது கலாச்சாரப் பாரம்பரியத்தின் ஒரு பொற்காலமாகும் . மனதை வருடும் மெல்லிசையாகட்டும், உற்சாகம் தரும் துள்ளல் பாடல்களாகட்டும்-அவரது குரல் என்றுமே தனித்துவமானது.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தனது பாடல்களால் வென்றவர். அவருடன் நான் மேற்கொண்ட உரையாடல்களும், பகிர்ந்துகொண்ட தருணங்களும் என் வாழ்வில் என்றும் நீங்காத நினைவுகளாக இருக்கும். அவரது மறைவு இசை ஆர்வலர்களுக்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பு. இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மறைந்தாலும், அவரது இன்னிசை பாடல்கள் வரும் தலைமுறைக்கும் உத்வேகம் அளித்துக்கொண்டே இருக்கும்” என்று தனது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ஆஷா போஸ்லேவுடன் தான் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களைக் கோர்த்து வீடியோவாக பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X