தனித்துவமான குரல்.. பாசமிகு அன்பு சகோதரி ஆஷா போஸ்லே மறைவு.. இளையராஜா உருக்கம்!
சென்னை: பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே நேற்று உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.அவருக்கு வயது 92. மறைந்த பாடகி லதா மங்கேங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா போஸ்லேவின் மறைவு பலலை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசைஞானி இளையராஜா உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில்,பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லா அவர்களின் மறைவு செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இது ஒரு சாதாரண இரங்கல் அல்ல. என் மனதிற்கு மிக அருகில் இருக்கும் ஒரு பெரும் இழப்பு. அவர் என்னிடம் காட்டிய பாசமும் அன்பும், அதே நேரத்தில் ஒரு பின்னணி பாடகியாக என்னை மதித்து நடந்து கொண்ட விதமும் என்றும் மறக்க முடியாதவை. அந்த நினைவுகள் என் வாழ்நாளில் எப்போதும் என்னுடன் இருக்கும்.
என் வாழ்க்கையில் அழியாத இடத்தை பெற்றவர் ஆஷா போஸ்லே.

ஆஷா போஸ்லே : அவரது திறமைக்கு அளவே இல்லை, வேறு எந்த குரல்களுடனும் ஒப்பிடமுடியாத தனிக்குரல். தனித்திறமை வாய்ந்த குரலும் கூட, அவரின் இழப்பு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. எப்போது சென்னைக்கு வந்தாலும், என்னை வந்து சந்திக்கும் அன்பு சகோதரி, அவரின் அன்பையும் பாசத்தையும் என்னால் மறக்கவே முடியாது. திரையுலகம் என்றைக்கும் மறக்க முடியாத குரல். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்துவாடும் குடும்பத்திற்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என இளையராஜா மிகவும் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
தனித்துவமான குரல்: 20 மொழிகளில் கிட்டத்தட்ட 12 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கும் ஆஷா போஸ்லே, இளையராஜா இசையில் ஏராளமான பாடல்களை பாடி இருக்கிறார். இவர் இளையராஜா இசையில் முதன் முதலாக 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தில் 'செண்பகமே செண்பகமே' என்ற பாடலை பாடினார். அந்த படம் இன்று வரைக்கும் அனைவரும் கொண்டாடும் ஒரு பாடலாக உள்ளது. அந்த பாடலைத் தொடர்ந்து, சத்யா படத்தில் வரும் 'வளையோசை', ஹேராம் படத்தில் "நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி' என இன்னும் பல வெற்றிப்பாடல்களை பாடி உள்ளார்.


Click it and Unblock the Notifications











