அமெரிக்காவில் கலக்கிய பாடகி பைரவி.. 12 மணி நேரம் பாடி சாதனை!

சென்னை : அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாதனை போட்டியில் கலந்து கொண்டு தன் மாணவர்களுடன் தொடர்ந்து 12 மணி நேரம் பாடி சாதனை படைத்தார்.

தனியார் தொலைக்காட்சிகளில் பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்ற பைரவி தண்டபாணி, என்னைப் பார் யோகம் வரும் படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து தேவா, சபேஷ் - முரளி, ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் இசையில் பாடிய இவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், உன்னி கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து பல ஆல்பங்களுக்கு பாடியுள்ளார்.

 Singer bhairavi dhandapani performs in us

கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசையையும் முறையாக பயின்ற பைரவி தண்டபாணி, அமெரிக்காவிலுள்ள டெனீஸ் மாநிலத்தின் நாஷ் வல்லி எனுமிடத்திலுள்ள "அவதூர் மியூசிக்கல்ஸ் அகாடமியில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

 Singer bhairavi dhandapani performs in us

இதில் பல மாணவர்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி போன்ற சங்கங்கள் நடத்தும் இசை நிகழ்ச்சிகளில் மேற்கூறிய அனைத்து மொழிகளிலும் பாடி அந்தந்த சங்கங்கள் மற்றும் அந்தந்த மொழி மக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

 Singer bhairavi dhandapani performs in us

பண்டிகை காலங்களான தீபாவளி, சித்திரை திருவிழா, விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு இவரது இசை நிகழ்ச்சி என்றால் ஏராளமான ரசிகர்கள் கூடுவார்கள்.

மலேசியா, பாரீஸ், இந்தியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகள் கலந்து கொள்ளும் 'வேல்டு ரெக்கார்ட் ஈவன்ட், 'இந்தியன் ரெக்கார்ட் ஈவன்ட்' எனும் போட்டிகளில் அமெரிக்கா சார்பாக தன் மாணவர்களுடன் கலந்து கொண்டு தொடர்ந்து 12 மணி நேரம் பாடி, தன் மாணவர்களுடன் பாடி வேல்டு ரெக்கார்ட் சான்றிதழை பெற்றுள்ளார். இந்தியாவிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களாக நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன், நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் மற்றும் ஸ்ரீராம் மியூசிக்கல் அகாடமி சார்பாக ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Read more about: singer world record பாடகி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X