மகளை இப்படியா அசிங்கப்படுத்துவது.. ரொம்ப தப்பு.. ஷிவானி அம்மாவை விளாசி பிரபல பாடகி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகளை கண்டப்படி திட்டிய ஷிவானியின் அம்மாவை பிரபல பாடகியான சின்மயி கடுமையாக விளாசியுள்ளர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பிரபலங்களில் ஒருவர் ஷிவானி நாராயணன்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸில் பங்கேற்றுள்ள இவர் சக போட்டியாளரான பாலாஜியுடன் நெருக்கமாக பழகி வந்தார்.

பாலாஜிக்கு அசிஸ்டென்ட்

பாலாஜிக்கு அசிஸ்டென்ட்

பாலாஜிக்கு ஊட்டிவிடுவது, அவருக்கு மசாஜ் செய்வது, கைகால்களை அமுக்கிவிடு விடுவது, காலையில் எழுப்பி விடுவது என அவருக்கு அசிஸ்டென்ட் வேலை பார்த்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதுவரை வாயே திறக்காமல் உள்ளார் ஷிவானி.

ஆயா வேலை செய்கிறார்

ஆயா வேலை செய்கிறார்

பாலாஜியை தவிர வேறு யாரிடமும் பேசாமலும் இருந்து வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் இருவருக்கும் காதல் என தகவல் பரவி வருகிறது. மேலும் ஷிவானி பாலாஜிக்கு ஆயா வேலை செய்து வருகிறார் என்றும் கூறி வருகின்றனர்.

எதுக்கு இங்க வந்த?

எதுக்கு இங்க வந்த?

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்றது இதனை முன்னிட்டு முதல் நபராய் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார் ஷிவானியின் அம்மா, அகிலா. வந்த வேகத்தில் இங்க எதுக்கு வந்த? என்ன பண்ணிக்கிட்டு இருக்க? என்று விளாசினார்.

பாலா பின்னாடியே சுத்துற

பாலா பின்னாடியே சுத்துற

பாலாஜிக்கு ஆயா வேலை பார்க்க தான் இங்க வந்தீயா? எப்போ பார்த்தாலும் அவன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்க. என் மானத்த குழித்தோண்டி புதைச்சுட்ட என்று கன்னாபின்னாவென பேசினார். ஒரு நேஷனல் சேனல் என்றும் பார்க்காமல் சரமாரியாக திட்டி தீர்த்தார்.

பலர் ஆதரவு

பலர் ஆதரவு

அவரது பேச்சுக்கு நெட்டிசன்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பலரும் ஆதரவு தெரிவித்தனர். சொந்த பந்தங்கள் முன்னிலையில் ஒரு பெண்ணின் தாயாக அவர் பட்ட வலியின் வெளிப்பாடுதான் இது என்றும் அகிலாவுக்கு ஆதரவாய் கருத்து பதிவிட்டு வந்தனர்.

மகளை அசிங்கப்படுத்தியுள்ளார்

மகளை அசிங்கப்படுத்தியுள்ளார்


இந்நிலையில் ஷிவானியின் அம்மாவின் நடவடிக்கைக்கு பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பது இல்லை, ஆனால் அந்தத் தாய் தன் மகளை அசிங்கப்படுத்தியதை நான் கேள்விப்பட்டேன்.

மகள்கள் தவறான பாதை..

மகள்கள் தவறான பாதை..

அது எனக்கு ரொம்பவும் தவறாக தெரிகிறது. 4 பேர் அவதூறாக சொல்வதைக் கேட்டுக்கொண்டு பல அம்மாக்கள் தங்களுடைய மகள்களை அசிங்கப்படுத்துவதால் தான் அந்த மகள்கள் தவறான பாதையை தேர்ந்தெடுப்பதற்கும் காரணமாக உள்ளது.

அசிங்கப்படுத்துவதை நிறுத்துங்கள்

அசிங்கப்படுத்துவதை நிறுத்துங்கள்

நீங்கள் ஒரு நல்ல பெற்றோர் எனில் தயவு செய்து உங்கள் மகளின் கேரக்டரை அசிங்கப்படுத்துவதை நிறுத்திவிட்டு ஒரு பொறுப்பான பெற்றோராக பேசுங்கள் என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் சொல்வது சரிதான் ஆனாலும் குழந்தைகளும் பெற்றோரின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X