பூனம் பாண்டே மரணம் செய்தி பொய்.. இப்படியா செய்வது கடுப்பான சின்மயி!
சென்னை: பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையும், சோஷியல் மீடியாவில் பிரபலமான பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், தான் உயிருடன் இருப்பதாக பூனம் பாண்டே வீடியோ வெளியிட்ட நிலையில், பாடகி சின்மயி அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை பூனம் பாண்டே. ஏராளமான ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். சோஷியல் மீடியாவில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் குறித்து, இன்ஸ்டாகிராமில் அதிர்ச்சியான செய்தி ஒன்று பரவியது.

நடிகை பூனம் பாண்டே: அதில், இன்று காலை எங்களுக்கு கஷ்டமான நாளாக அமைந்துவிட்டது.. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். துக்கமான இந்த நேரத்தில், அனைத்திற்கும் அவளை அன்புடன் நினைவுகூறுவோம் என்று பதிவிடப்பட்டிருந்தது. பூனம் பாண்டேவின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்: அவரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவிக்கும் நிலையில் பாடகி சின்மயி மரணம் குறித்து இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், கர்பப்பை புற்றுநோய் என்பது உடல் உறவால் மட்டும் வரக்கூடிய நோய் இல்லை என்பது கூட தெரியாமல் பல முட்டாள்கள் இருக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு நோய் வந்துவிட்டாலே அவரது குணத்தை விமர்சித்து பேசுவது தான் இந்த சமூகத்தின் வழக்கமாகிவிட்டது என்று பதிவிட்டு இருந்தார்.
நான் உயிருடன் தான் இருக்கிறேன்: பூனம்பாண்டேவின் மரணச் செய்தி இணையத்தில் தீயாக பரவி வரும் நேரத்தில், பூனம் பாண்டேன தனது இன்ஸ்டாகிராமில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் நான் உயிரிழக்கவில்லை. நான் உயிருடன் தான் இருக்கிறேன். ஏராளமான பெண்கள் துரதிஷ்டவசமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கிறார்கள். இது முற்றிலும் தடுக்கப்படக்கூடிய ஒரு நோய். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட விழிப்புணர்வு விளம்பரம் என கூறியிருந்தார்.
கடுப்பான சின்மயி: பூனம் பாண்டேவின் பொய்யான மரண செய்திப் பார்த்து கடுப்பான பாடகி சின்மயி, தலையில் அடித்துக்கொண்டு இருப்பது போல எமோஜிக்களை பதிவிட்டு, பொய்யான மரணம் மூலம் கர்பப்பை புற்று நோய் விழிப்புணர்வு மிகவும் மோசமான ஒரு செயல். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் புற்றுநோயால் தான் இறந்தார் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











