முட்டாள்தனமாக கேள்வி கேட்ட யூடியூபர்.. செம தில்லாக விளாசி விட்ட 96 நடிகை.. ஆதரவு கொடுத்த சின்மயி!

சென்னை: 96 படத்தின் ப்ளாஷ் பேக் போர்ஷனில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கௌரி கிஷன். அந்த படத்திற்கு முன்னும் பின்னும் அவர் படங்களில் நடித்திருந்தாலும் 96 படம் அவருக்கு அடையாளமாக மாறி உள்ளது. இவரது நடிப்பில் உருவாகி உள்ள படமான அதர்ஸ் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடல் மற்றும், செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது யூடியூபர் ஒருவர் மிகவும் அநாகரீகமாகவும் முட்டாள்தனமாகவும் எழுப்பிய கேள்விக்கு கௌரி கிஷன் செம தில்லாக பதிலளித்ததற்கு பாடகி சின்மயி பாராட்டியுள்ளார்.

அதர்ஸ் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது யூடியூபர் ஒருவர், ஏற்கனவே நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது தான் எழுப்பிய கேள்வியில் எந்த தவறும் இல்லை என்று வாதிட்டார். அதாவது, அவர் நடிகரை நோக்கி நடிகையைத் தூக்கி உள்ளீர்கள், நடிகையை எடை எவ்வளவு என்று கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் கௌரி கிஷன் கண்டித்துப் பேச, அதை குறிப்பிட்டு இங்கு கேள்வி எழுப்பினார் அந்த யூடியூபர். அவர் அவ்வாறு கேள்வி எழுப்பியது மட்டும் இல்லாமல், தான் விளையாட்டுக்குத்தான் கேள்வி கேட்டேன், சினிமா நடிகர்கள் மற்றும் நடிகையிடம் இந்திய பொருளாதாரம், உலக அரசியல் குறித்தா கேள்வி எழுப்ப முடியும் என்று கேட்டு தான் கேட்ட கேள்வி சரி என்று வாதிட்டுக் கொண்டு இருந்தார். மேலும் கௌரி கிஷன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

Singer Chinmayi Appreciates Actress Gouri Kishan Slams Youtuber Who Ask Her Weight Indirectly
Photo Credit:

கடுப்பான கௌரி கிஷன்: அந்த யூடியூபர் பேசுவதை எல்லாம் கேட்ட பின்னர், கௌரி கிஷன் பேசியது, பல ஆண்டுகளாக தமிழ் சினிமா நடிகைகள், அல்லது இந்திய சினிமா நடிகைகள் பேச தவிர்த்த அல்லது பேசத் தயங்கிய பேச்சு, அல்லது பதிலடி என்று கூறலாம். அதாவது அவர் அளித்த பதிலில், " நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் முட்டாள் தனமான கேள்வி. எனது எடையை தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். எடை குறித்த கேள்விகள் ஏன் எப்போதும் நடிகைகளை நோக்கியே இருந்து வருகிறது? எனக்கு என்னென்ன பிரச்னைகள் உடல் சார்ந்து இருக்கிறது என்று தெரியுமா? அந்த பிரச்னைகளை நான் உங்களிடத்தில் சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது.

மன்னிப்பு கேட்க முடியாது: அதர்ஸ் படத்தில் எனது கதாபாத்திரம் குறித்த கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை, எனது கதாபாத்திரத்திற்காக நான் என்ன முயற்சி எடுத்தேன் என்ற கேள்வியும் என்னை நோக்கி எழுப்பப்படவில்லை. மாறாக எனது உடல் எடை குறித்த கேள்வியை நடிகரிடத்தில் மறைமுகமாக கேட்டதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதற்கும் இந்த படத்தின் கதைக்கும் என்ன தொடர்பு உள்ளது? உங்கள் கேள்வி தவறு, அது ஒரு முட்டாள்தனமான கேள்வி, நான் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது" என்று செம தில்லாக பதிலடி கொடுத்தார். ஒரு கட்டத்தில் அந்த யூடியூபர் அமைதியாகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Singer Chinmayi Appreciates Actress Gouri Kishan Slams Youtuber Who Ask Her Weight Indirectly
Photo Credit:

சின்மயி: பலரும் அந்த யூடியூபரைப் போட்டு கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில், " கௌரி அந்த கேள்வியையும் சூழலையும் மிகவும் அற்புதமாக கையாண்டார். அவமரியாதையான தேவையற்ற கேள்விகளைக் கேட்டவருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். இது மட்டும் இல்லாமல், இவ்வளவு இளம் வயதில் தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக நின்றதற்கு தனி பாராட்டுகள். எந்த நடிகரிடமும் அவரது எடை என்ன என்று கேட்பதில்லை. ஒரு நடிகையிடம் ஏன் கேட்டார்கள் என்று தெரியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X