8 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவான சின்மயி.. வாடகைத்தாய் மூலம் இல்லை என விளக்கம்!

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான பாடகி சின்மயி இரண்டு அழகிய குழந்தைகளுக்கு அம்மாவாகி உள்ளார்.

ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளது என்றும் அவர்களின் பெயர்களையும் ரிவீல் செய்து பிஞ்சு விரல்களை பிடித்திருக்கும் செம க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

8 ஆண்டுகளுக்கு பிறகு பாடகி சின்மயிக்கு குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், இது வாடகைத்தாய் மூலம் பெற்ற குழந்தைகள் அல்ல என்றும் விளக்கி உள்ளார்.

37 வயதில் அம்மாவான சின்மயி

37 வயதில் அம்மாவான சின்மயி

1984ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி மும்பையில் பிறந்தவர் பாடகி சின்மயி. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சின்மயி பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. பின்னணி பாடகியாக மட்டுமின்றி நயன்தாரா, சமந்தா, தமன்னா என பல முன்னணி நடிகைகளுக்கும் இவர் தான் தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு டப்பிங் கொடுத்து இருக்கிறார். பல ஆண்டுகளாக குழந்தை பெறாமல் இருந்த நிலையில், தற்போது தான் தாயாகி விட்டேன் என்கிற சந்தோஷ செய்தியை பகிர்ந்துள்ளார் சின்மயி.

ட்வின்ஸ்

ட்வின்ஸ்

அதுவும் ஒன்றுக்கு இரண்டு குழந்தைகளாக தற்போது பாடகி சின்மயிக்கு மிகப்பெரிய சந்தோஷம் கிடைத்துள்ளது. நடிகர் ராகுல் ரவிந்திரனை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாடகி சின்மயி சுமார் 8 ஆண்டுகள் கழித்து ஒரு ஆண் மற்றும் பெண் என இரு குழந்தைகளுக்கு அம்மாவாகி உள்ளார்.

பிஞ்சு விரல்களும் பெயர்களும்

பிஞ்சு விரல்களும் பெயர்களும்

பெண் குழந்தைக்கு த்ரிப்த்தா என்றும் ஆண் குழந்தைக்கு ஷர்வாஸ் என்றும் பெயர் சூட்டியுள்ள சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், குழந்தைகளின் பிஞ்சு விரல்களை ஷேர் செய்து எனக்கும் ராகுலுக்கும் இனி இவர்கள் இருவரும் தான் உலகமே என உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார். பாடகி சின்மயிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

வாடகைத்தாய் மூலம் இல்லை

வாடகைத்தாய் மூலம் இல்லை

சில நெட்டிசன்கள் எனக்கு டைரக்ட் மெசேஜ் செய்து இது வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தைகள் தானே என கேட்டிருந்தார்கள். மேலும், நீங்கள் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கவும் இல்லை, அப்போது எடுத்த புகைப்படங்களையும் பகிரவில்லையே என்றனர். எனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும் நான் கர்ப்பமாக இருந்த விஷயம். முன்னரே சொல்லி இருந்தால், அதற்கு ஏகப்பட்ட கதைகளை கட்டி மனசுக்கு கஷ்டத்தை கொடுத்திருப்பார்கள். அதனால் தான் வெளியே சொல்லவில்லை என விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் பிரசன்னா, நடிகை கல்யாணி பிரியதர்ஷினி இயக்குநர் லீனா மணிமேகலை என பல பிரபலங்கள் சின்மயிக்கு குழந்தை பிறந்த செய்தி தெரிந்ததும் ட்வீட் போட்டு வாழ்த்தி வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் சின்மயி. மேலும், சி செக்‌ஷனின் போது பஜன் பாடலை தான் பாடியதாகவும் பதிவிட்டு இருக்கிறார் சின்மயி. தாயும் குழந்தைகளும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X