நாம் எவ்வளவு கீழிறங்கிவிட்டோம்?..சென்னையில் மூதாட்டி பா*யல் வன்கொடுமை.. சின்மயி கண்டனம்!

சென்னை: பெண்கள், குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னை வேளச்சேரியில் நடைபயிற்சிக்கு சென்ற 60 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதை பாடகி சின்மயி கடுமையாக கண்டித்துள்ளார்.

60 வயது மூதாட்டி: சென்னை வேளச்சேரியில் உள்ள பூங்காவில் 60 வயது மூதாட்டி ஒருவர் பூங்காவிற்கு நடைபயிற்சி சென்றுள்ளார். அப்பொழுது அங்கு வந்த இளைஞர்கள் சுமார் ஐந்து பேர் போதையில் மூதாட்டியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால், மூதாட்டி கூச்சலிட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்க்கும் பொழுது மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவ உதவிக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த வேளச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதில், 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Chinmayi Chennai old women
Photo Credit:

சின்மயி கண்டனம்: 60 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆதங்கத்தை வெளிப்டுத்தி இருக்கும் பாடகி சின்மயி,சென்னையில் அதுவும் வேளச்சேரியில் 61 வயது மூதாட்டி ஒருவரை ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் படித்தபோது அதிர்ச்சியடைந்தேன். நாம் எவ்வளவு கீழிறங்கிவிட்டோம். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களில் ஒருவர், 15 வயது சிறுவன் என்றும் அவர் பீகாரைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது என பதிவிட்டுள்ளார். கடந்த வாரம் தான், கோவையில் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி இருக்கும் நிலையில், தலைநகரம் சென்னையில் மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X