கர்ப்பமாக இருந்த 32 வாரங்கள்..சின்மயி வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்களின் சந்தேகம் தீர்ந்தது!

சென்னை : வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக பேச்சு இணையத்தில் பரவிவரும் நிலையில் அதற்கு பாடகி சின்மயி விளக்கம் கொடுத்துள்ளார்.

பின்னணி பாடகி சின்மயி கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ஒரு தெய்வம்தந்த பூவே பாடலை பாடி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். முதல் பாடலே இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது

இதைடுத்து மையா மையா, ஒரு தடவை சொல்வாயா, நிலா வானம் காற்று, என்னோடு நீ இருந்தால் என பல ஹிட் பாடல்களையும் பாடி உள்ளார். இவர் பாடகியாக மட்டும் இல்லாமல், பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங்கும் கொடுத்து இருக்கிறார்.

பாடகி சின்மயி

பாடகி சின்மயி

மும்பையில் பிறந்த சின்மயி பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்தார். இசையின் மீது இவருக்கு இருந்த ஆர்வத்தால், கர்நாடக இசை மற்றும் கஜல், இந்துஸ்தானி போன்றவற்றை முறையாக கற்றார். இசைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சின்மயி, வைரமுத்து மீது இவர் வைத்த குற்றச்சாட்டு காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சி அடைந்தது. இதனால், இவரது இசை வாழ்க்கை பெரும் பின்னடைவை சந்தித்தது.

இரட்டைக்குழந்தை பிறந்தது

இரட்டைக்குழந்தை பிறந்தது

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சின்மயி அவ்வப்போது, பல கருத்துக்களை பகிர்ந்து அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். 2014ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான நடிகர் ராகுல் ரவீந்தரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார் சின்மயி.

வாடகைத்தாய் முறையா?

வாடகைத்தாய் முறையா?

நயன்தாரா வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயானதால் வாடகைத்தாய் விவகாரம், சோஷியல் மீடியாவில் பேசு பொருளாக இருந்தது. இதையடுத்து, இரட்டை குழந்தைக்கு தாயான பாடகி சின்மயியை பலர் உங்களுக்கும் வாடகைத்தாய் முறையில் தான் குழந்தை பிறந்ததா என கேள்வி கேட்டு வந்தனர்.

கர்ப்பமாக இருந்த 32 வாரங்கள்

கர்ப்பமாக இருந்த 32 வாரங்கள்

இந்நிலையில், பாடகி சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, கர்ப்பமாக இருந்த 32 வாரங்களில் நான் எடுத்த ஒரே செல்ஃபி என்று பதிவிட்டுள்ளார்.மேலும், நான் கர்ப்பமாக இருக்கும் போட்டோவை வெளியிட காரணம் பலர், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டீர்களா? என்று கேட்டனர் அதற்காத்தான் இந்த போட்டோவை நான் ஷேர் செய்தேன் என பதிவிட்டுள்ளார். பாடகி சின்மயி குழந்தைகளுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளார். இதனால், ரசிகர்களின் சந்தேகம் தீர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X