என் புருஷன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பார்க்குறாங்க.. பாடகி சின்மயி பரபரப்பு புகார்!
சென்னை: பிரபல பின்னணி பாடகி மற்றும் டப்பிங் கலைஞரான சின்மயி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் "ஒரு தெய்வம் தந்த பூவே" பாடலை பாடி தமிழ் திரையுலகில் பிரபலமானவர் பாடகி சின்மயி.
நயன்தாரா, தமன்னா, கங்கனா ரனாவத், த்ரிஷா, காஜல் அகர்வால் என பல முன்னணி நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசி உள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில்
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏகப்பட்ட ஹிட் பாடல்களை பாடி அசத்தியவர் சின்மயி. கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் தொடங்கி எனக்கு 20 உனக்கு 18, பாய்ஸ், கண்களால் கைது செய், நியூ, குரு, சக்கரக்கட்டி, விண்ணைத்தாண்டி வருவாயா, கடல், அம்பிகாபதி, கோச்சடையான், ஐ, 24, காற்று வெளியிடை, பிகில், சர்வம் தாள மயம் உள்ளிட்ட பல படங்களில் இவர் பாடியுள்ளார். மேலும், பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் சின்மயி பாடி உள்ளார்.

பூமிகா டூ சாரா அலி கான்
சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகாவுக்கு டப்பிங் பேசிய சின்மயி, கங்கனா ரனாவத், வேதிகா, சமீரா ரெட்டி, நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, காஜல் அகர்வால், ராதிகா ஆப்தே, கார்த்திகா நாயர், டாப்ஸி, ஆண்ட்ரியா, சமந்தா, எமி ஜாக்சன், பிரியங்கா சோப்ரா, க்ரித்தி சனோன், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், கலாட்டா கல்யாணம் படத்தில் சாரா அலி கான் வரை டப்பிங் பேசியுள்ளார்.

நடிகருடன் திருமணம்
சமந்தா நடிப்பில் வெளியான மாஸ்கோவின் காவேரி படத்தில் ஹீரோவாக நடித்திருந்த ராகுல் ரவீந்திரன் என்பவரை தான் கடந்த 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் பாடகி சின்மயி. இந்நிலையில், தற்போது கணவர் ராகுல் ரவிந்திரனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

மார்பிங் செய்து
தனது கணவர் நடத்தி வரக்கூடிய போட்டோ ஷூட் நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தேவ் ராகுல் என்பவர் செயல்படுவதாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பாடகி சின்மயி. பெண் குழந்தைகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து தனது நிறுவன பெயரில் பதிவிடுவதாக பாடகி சின்மயி புகாரில் தெரிவித்துள்ளார். உடனடியாக தேவ் ராகுல் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











