For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தலைவரின் தம்பி.. வைரமுத்துவுக்கு சப்பைக்கட்டு கட்டிய ரசிகர்.. செப்பல் ஷாட் பதில் கொடுத்த சின்மயி!

  |

  சென்னை: கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிய ரசிகருக்கு பாடகி சின்மயி, அலப்பறையே இல்லாமல் நச் பதில் கொடுத்திருக்கிறார்.

  பிரபல பின்னணி பாடகியான சின்மயி, கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  சின்மயியின் குற்றச்சாட்டால் தமிழ் திரையுலகம் ஆடித்தான் போனது. சின்மயின் இந்த குற்றச்சாட்டுக்குப் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் எதிர்ப்பு கிளம்பியது.

  2019ஆம் ஆண்டில் உங்கள் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் யார்? நச்சுன்னு ஒரு வோட்ட போடுங்க!

  சின்மயி உறுதி

  சின்மயி உறுதி

  பிரபலங்கள் பலரும் சின்மயியின் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருந்தார் சின்மயி.

  டாக்டர் பட்டம்

  டாக்டர் பட்டம்

  அண்மையில் தனியார் பல்கலைக்கழக விழாவில் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

  ஆண்டாள் விவகாரம்

  ஆண்டாள் விவகாரம்

  இதனால் கடுப்பான சின்மயி, வைரமுத்துவின் பாலியல் சீண்டலுக்கும் டாக்டர் பட்டம் கொடுங்கள் என்று விமர்சித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்து அமைப்புகள் பலவும் ஆண்டாள் விஷயத்தை கையில் எடுக்க, விழாவில் பங்கேற்பதை ரத்து செய்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

  பட்டம் கேன்சல்

  பட்டம் கேன்சல்

  அதோடு வைரமுத்துவுக்கு வழங்கப்பட இருந்த டாக்டர் பட்டமும் கேன்சல் செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வைரமுத்துவின் ரசிகர்கள் சின்மயின் டிவிட்டர் பக்கத்தில் அவரை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

  கூலாக பதிலடி

  கூலாக பதிலடி

  சின்மயின் ஜாதி பெயரை சொல்லியும் அவரை வேசி என்று விளாசியும் நாகரிகமற்ற வகையில் திட்டி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் சின்மயும் செம கூலாக செப்பல் ஷாட் பதிலை கொடுத்து வருகிறார்.

  தலைவரின் தம்பி

  அவர் வருகையை அனைத்து தமிழர்கள் வீடும் வரவேற்கும். அவர் எங்கள் மொழியின் கவிஞன். அவர் எங்கள் தலைவரின் தம்பி தலைவரிடம் தமிழ் பயின்றவர். இன்றும் உடன்பிறப்புகளின் சொத்து என்று திமுக ஆதரவாளரான இவர் வைரமுத்துவுக்கு ஆதரவாக சின்மயிக்கு பதில் தெரிவித்து டிவிட்டியிருக்கிறார்.

  கரெக்ட்டா இருக்கும்

  அவரது பதிலை பார்த்த சின்மயி, ஓகே கொண்டாடுங்க.. கரெக்ட்டா இருக்கும்.. என்று இரட்டை அர்த்தத்தில் மொத்தமாக விளாசி பதிலடி கொடுத்திருக்கிறார்.

  வசை பேச்சு..

  மேலும் 48 மணி நேரத்துல அத்தனை ஆயிரம் பாப்பார வேசி என்று வசைபேச்சு. எதனால? உண்மைய சொன்னதுக்கு. பொய் சொல்ற பப்ளிஸிடிக்காக பண்ற பாஸ்போர்ட் எங்க, கோர்ட்டு லீவு... தமிழ் நாட்டுல ரேப் பண்ணவங்க, பாலியல் தொல்லை பண்ணவங்க எல்லாம் "அந்த கேள்விய தவிற என்ன வேணாலும் கேளுங்கன்னு சொல்லுவாங்க.. என்று குறிப்பிட்டுள்ளார் சின்மயி.

  முக்கிய நபர்கள்

  மேலும் பல முக்கிய நபர்களும் சரிங்க எசமான்னு குற்றம் சாட்டுனத பத்தி கேள்வி கேக்க மாட்டாங்க. ஆனா என்ன பத்தி எந்த இன்டர்வியூ வந்தாலும் மீ.. டூ கட்டாயமா இருக்கும். பாலியல் தவறுகள செய்யரவங்க சாட்சி வெச்சுட்டு பண்ணமாட்டனுங்கன்னு, தன்னை பஸ்ல கிள்ளுனாங்கன்னு சொன்ன உடனே நம்புற ஆண்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

  அவர் மட்டும் எழுதல

  18 வருட கேரியர்ல 8 மொழிகள்ள பாடிருக்கேன். மராத்தி ல அவார்டு கூட வாங்கிருக்கேன். நான் பாடுன மராத்தி பாடலும் சரி, அந்த படமும் சரி சாதனை படைத்த ஒன்று. அதுல உங்க கவிஞர் பிச்ச போட்டோ வாய்ப்பு குடுத்தோ நான் பிழைக்கல. தேவையும் இல்ல இன்டஸ்ட்ரில அவர்மட்ட்ட்ட்ட்ட்டுமே பாடல்கள் எழுதல என்று தெரிவித்துள்ளார் சின்மயி.

  English summary
  Singer Chinmayi gives slipper shot reply to Viramuthu supporter in twitter. DMK workers supports Vairamuthu.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X