அவங்களை ஏன் கேள்வி கேட்கல.. அறிவு கெட்டத்தனமான கேள்வி.. சின்மயி பளிச் பதில்!
சென்னை: மீடூ விவகாரம் குறித்து நான் பேசிய போது 35 வயதில் சின்மயிக்கு வந்த அறிவு, 19 வயதில் ஏன் இல்லை என்று அறிவு கெட்டத்தனமாக கேள்வி கேட்கிறார்கள் என்று நடிகை சின்மயி தெரிவித்துள்ளார்.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலை பாடி ரசிகர்களை கட்டிப் போட்டவர் பாடகி சின்மயி.

முதல் பாடலே இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
சின்மயி: சன் தொலைக்காட்சியில் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சின்மயி டைட்டிலை வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சியை பார்த்த ஏஆர் ரஹ்மான். சின்மயிக்கு தனது படத்தில் பாடும் வாய்ப்பை கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து ஏராளமான பாடல்களை பாடி சின்மயி, முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக: இவர் பின்னணி பாடகியாக மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் உள்ள இவர், சமந்தா, த்ரிஷா, காஜல் அகர்வால் மற்றும் தமன்னா போன்றவர்களுக்காக தமிழில் வாய்ஸ் கொடுத்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சின்மயி, பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்மம் குறித்து அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.
சின்மயி: இந்நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சின்மயி, ஒரு பெரிய நடத்தில் இருக்கும் நான், நம்மிடம் தவறாக நடந்து கொள்வதை நம் மனதே முதலில் ஏற்றுக்கொள்ளாது. அவர் நல்லவர் நாம் தான் அவரை தவறாக புரிந்து கொண்டோம் என்று நினைப்போம், ஆனால், நம்முடைய உடல், அந்த நபர் செய்யும் தவறை தெளிவாகச் சொல்லும். ஆனாலும் அந்த கஷ்டத்தை வெளியில் சொல்லாமல் அனுபவிக்க வேண்டும்.
இது பெண்மையின் அடையாளம்: என் வீட்டில் வேலை செய்த பெண்ணை, கணவர் குடித்துவிட்டு அடித்து கொடுமைப்படுத்தினார். ஆனால், அந்த பெண் என் கணவர் ரொம்ப நல்லவர் என்று சொல்றாங்க. பெண் என்றால் நீ போராடனும், எவ்வளவு துன்பம் வந்தாலும் நீ கஷ்டப்படனும், இதுதான் இன்றைய பெண்மையின் அடையாளமாக திணிக்கப்பட்டுள்ளது.
அவங்களை ஏன் கேள்வி கேட்கல: மீடூ விஷயம் குறித்த நான் பேசிய போது 35 வயதில் சின்மயிக்கு வந்த அறிவு, 19 வயதில் ஏன் இல்லை என்ற கேள்வி கேட்பது அறிவு கெட்டத்தனமாக இருக்கிறது. என்னை எத்தனை பேர் நிற்க வைத்து கேள்வி கேட்டார்கள். ஆனால், வைரமுத்து, ராதா ரவியை ஏன் கேள்வி கேட்கவில்லை. கேட்கமாட்டாங்க ஏன் என்றால், மீடியாவில் இருக்கும் முக்கால் வாசி பேர் ஆண்கள், இவர்கள் எந்த காலத்திலும் மற்றொரு ஆ,ண் செய்த தவறை கேள்வி கேட்க மாட்டார்கள் என்று பாடகி சின்மயி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











