நடிகர் ராகுலை மணக்கிறார் பாடகி சின்மயி!

By Shankar

Singer Chinmayi to marry upcoming actor Rahul
சென்னை: பிரபல பாடகி சின்மயிக்கும் நடிகர் ராகுலுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக அவரது அம்மா தெரிவித்துள்ளார்.

'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானால் அறிமுகமானவர் சின்மயி. டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் உள்ளார். பூமிகா, பத்மப்ரியா, சமீரா, கங்கனா ரணாவத், சமந்தா, காஜல் அகர்வால் என்று பல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியிருக்கும் சின்மயி தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டார்.

தொடர்ந்து எந்திரன் உள்ளிட்ட நிறைய படங்களில் பாடியுள்ளார். சர்ச்சைகளுக்கும் இவருக்கும் அப்படி ஒரு ராசி.

'மாஸ்கோவின் காவிரி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராகுல் ரவீந்திரனைக் காதலித்து வந்தார்.

இப்போது அவரையே திருமணம் செய்துகொள்ளப் போகிறார். சின்மயி - ராகுல் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதித்துவிட்டார்களாம்.

ராகுல் இப்போது 'வணக்கம் சென்னை' படத்தில் நடித்த முடித்துள்ளார். தெலுங்குப் படங்களிலும் நடிக்கிறார்.

சின்மயி அம்மா பத்மாசினியிடம் இதுகுறித்து கேட்டபோது, "என் மகள் சின்மயிக்கும், நடிகர் ராகுலுக்கும் திருமணம் நடக்கப்போவது உண்மைதான். அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்கும். அடுத்த பிப்ரவரியில் திருமணம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X