நான் நலமாகத் தான் இருக்கிறேன்.. தீயாய் பரவிய மரண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பாடகி சின்மயி அம்மா
சென்னை: பாடகி சின்மயி அம்மா பத்மஹாசினி காலமாகி விட்டதாக நேற்று இரவு திடீரென வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.
Recommended Video
உடனடியாக பாடகி சின்மயி அது வெறும் வதந்தி என்றும் தேவையில்லாமல் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
12 வயது சிறுவனின் இதய நோய் தீர உதவுங்கள் ப்ளீஸ்
பாடகி சின்மயி அம்மாவிடமே இதுபற்றி நேரடியாக போன் செய்து கேட்டதில், நான் மிகவும் நலமாகத் தான் இருக்கிறேன். ஏன் இப்படி நள்ளிரவில் வதந்தியை கிளப்பினார்கள் என்று தெரியவில்லை எனக் கூறினார்.

மரண வதந்தி
ஜாக்கி சான் முதல் பல பிரபலங்களுக்கு இது போன்ற மரண வதந்திகள் கிளம்பி உள்ளன. சற்றும் எதிர்பாராத விதமாக பிரபல பின்னணி பாடகி சின்மயியின் அம்மா பத்மஹாசினி காலமானதாக நேற்று இரவு முதல் சமூக வலைதளங்களில் வதந்தி ஒன்று வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

சின்மயி மறுப்பு
இப்படியொரு வதந்தி பரவுவதை அறிந்து கொண்ட பாடகி சின்மயி உடனடியாக சமூக வலைதளங்களில் என் அம்மா நல்லா இருக்கிறார். தேவையில்லாமல் இதுபோன்ற வதந்திகளை யாரும் பரப்பவோ பகிரவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி
ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட் சார்பில் நேரடியாக பாடகி சின்மயியின் தாயார் பத்மஹாசினிக்கு போன் செய்து விசாரித்ததில், நான் மிகவும் நலமுடன் இருக்கிறேன். என்னை பற்றி இப்படியொரு வதந்தி சொல்வதால் யாருக்கு என்ன லாபம். நள்ளிரவு கூட உறங்காமல் இப்படி கிளப்பி விடுகிறார்களே என செம கூலாக பதில் அளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொடர்ந்து பிரச்சனை
ஒரு வார காலமாகவே பல முறையில் தனக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக சில விஷமிகள் பிரச்சனை கொடுத்து வருகின்றனர் என்றும் எச்சரிக்கையாக இருங்கள் என நல விரும்பிகள் எச்சரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இப்படியொரு வதந்தி வரும் என எதிர்பார்க்கவில்லை. நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது. எதற்கு என்னைப் பற்றி இப்படி ஒரு வதந்தியை கிளப்பினார்கள் என தெரியவில்லை எனக் கூறினார். பத்மஹாசினியும் பாடகர் தான். பாடகி சின்மயிக்கு சிறு வயது முதல் இசையை கற்றுக் கொடுத்தவரும் அம்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











