உடலுறவு குறித்து பெண்கள் பேசக்கூடாதா? இளைஞர்களுக்கு பாடம் எடுத்த சின்மயி!

சென்னை : பாடகி சின்மயி உடலுறவு குறித்து பல விஷயங்களை வீடியோவில் தெளிவாக பேசி உள்ளார்.

பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான பாடகி சின்மயி ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார். அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் குரு படத்தில் இடம் பெற்ற மையா மையா பாடலை பாடி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

பின்னணி பாடகியாக மட்டுமின்றி நயன்தாரா, சமந்தா, தமன்னா என பல முன்னணி நடிகைகளுக்கும் இவர் தான் தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு டப்பிங் கொடுத்து இருக்கிறார்.

பிரபல பாடகி சின்மயி

பிரபல பாடகி சின்மயி

பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமே இல்லாத பாடகியாக இருக்கும் பாடகி சின்மயிக்கு கடந்த ஆண்டு இரட்டைக்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு த்ரிப்தா மற்றும் ஷர்வாஸ் என பெயர் வைத்தார். குழந்தை பிறந்த போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற என்ற வதந்திக்கு, கர்ப்பிணியாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து,வாய்க்கு வந்ததை பேசாதீர்கள் என்று பதிலளித்திருந்தார்.

பாடம் எடுத்த சின்மயி

பாடம் எடுத்த சின்மயி

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சின்மயி, யாரை பற்றியும் யோசிக்காமல், தனக்கு எது சரி எனப்படுகிறதோ அதை துணிந்து கருத்து தெரிவித்து வருகிறார். தற்போது சின்மயி, தனது இன்ஸ்டாகிராமில் உடலுறவு குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புரிதல் தேவை

புரிதல் தேவை

அதில் அவர், திருமணமாகி திருமண பந்தத்தில் இணைபவர்கள் தயவு செய்து இல்லறம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தாம்பத்திய உறவில் முதல்முறையாக ஒரு பெண் ஈடுபடும் போது, அந்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு இருக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் இது முற்றிலும் தவறானது. இந்த ரத்தப்போக்கு சில பெண்களுக்கு ஏற்படும், சில பெண்களுக்கு ஏற்படாது. இது பற்றி சரியான புரிதல் இல்லாமல், பலரின் வாழ்க்கையில் பல பிரச்சனை ஏற்படுகின்றன.

செக்ஸ் கல்வி தேவை

மேலும், செக்ஸ் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், சம்மந்தப்பட்ட மருத்துவரிடம் கலந்து பேசுகள். அதைவிட்டு விட்டு நீங்களாகவே இணையத்தில் ஆபாச படங்களை பார்ப்பதை தவித்து விடுங்கள். அதே போல பெண்களும், கணவனின் கட்டாயத்தின் பேரில், எதையும் செய்ய அனுமதிக்காதீர்கள், உங்களுக்கு பிடிக்காததை மனம் திறந்து பேசுங்கள், செக்ஸ் குறித்து பெண் எப்படி பேசுவது என்ற தயக்கத்தை முதலில் தூக்கி எறிங்கள். செக்ஸ் குறித்த கல்வி மிக முக்கியமான ஒன்று என பாடகி சின்மயி அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X